EMI இல் தங்கத்தை வாங்க முடியும் தெரியுமா? @gold

பணம் சேர்த்துதான் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை எப்போதோ மலையேறி விட்டது. ஆனால், தங்கள் சிறந்த முதலீடு என்றாலும் இதுவரை யாரும் தவணையில் பொன்னை விற்றதில்லை... ஆனால் இப்போது மாதத் தவணையிலும் பொன்னை வாங்கலாம் பெண்களே...

Written by - Malathi Tamilselvan | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 28, 2020, 04:34 PM IST
  • தங்கத்தின் விலை தற்போது கிராம் ஒன்றுக்கு 4500 ரூபாய்க்கு அதிகம்
  • தவணை முறையில் தங்கத்தை விற்கப்படுகிறது
EMI இல் தங்கத்தை வாங்க முடியும் தெரியுமா? @gold title=

தங்கம் என்றாலே அனைவரின் கவனமும் சொல்பவரின் வார்த்தைகளில் குவிந்துவிடும். பெண்களுக்கோ பொன் என்றால் போதும் என்று சொல்ல மனமே வராது. குழந்தைகளை கொஞ்சுவது கூட பொன்னே, தங்கமே என்று தான். 

தங்கம் ஆபரணத்த்திற்காக மட்டுமல்ல, முதலீட்டிற்கும் சிறந்த வழியாகும். அதிலும் இந்தியா தங்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம். அதிலும் குறிப்பாக, ஏழை எளியவர் முதல், செல்லந்தர்கள் வரை அனைவரிடம் ஒரு குந்துமணி பொன்னாவது இருக்கும். 

தங்கத்தை அனைவரும் விரும்பி வாங்கி வரும் நிலையில் தற்போது தங்கத்தின் விலை அதிகமாக இருக்கிறது. தங்க விற்பனை செய்யும் கடைகளும், நகைக்கடைகளும் பெருகிவிட்டன.

மாதத்தவணையில் தங்கம் வாங்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக பல வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. அதிலும் போட்டி ஏற்பட்டதால், ஒரு மாத தவணையை சலுகையாக கொடுக்கிறோம் என்று சில நகைக்கடைகள் கச்சைக் கட்டிக் கொண்டு இறங்கினால், சேதாரத்தை முடித்துவிட்டோம், செய்கூலியை தள்ளிபடி செய்துவிட்டோம் எங்களிடம் வருஙக்ள் என்று தங்கத்தை கூவிக்கூவி விற்கும் நிலைமை வந்துவிட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த ஆண்டு தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தாழ்வதும் உயர்வதுமாக ஊசலாடினாலும், தங்கம் என்றுமே ஒரு தங்கமான முதலீடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. 

ஆனாலும் தங்கத்தின் விலை தற்போது கிராம் ஒன்றுக்கு 4500 ரூபாய்க்கு அதிகம் என்ற நிலையில் தான் இருக்கிறது. எனவே, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் நகைக்கடைகள் ரூம் போட்டு யோசித்ததில், தவணை முறையில் தங்கத்தை விற்கும் காலமும் தற்போது வந்துவிட்டது.

blusestone என்ற ஆன்லைன் நகைக்கடை தற்போது, EMIயில் நகை விற்பனை செய்யும் புதிய சலுகையை அறிவித்துள்ளது.  ஈஎம்ஐ திட்டத்தின் கீழ் தங்க நகை வாங்குவோருக்கு முதல் மாத தவணையில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தங்கத்தை பத்திரத்தில் வாங்கி பத்திரமாக வைக்கும் இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் பொன் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மாதத் தவணை முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

இனி தங்கத்தை சுலபமாக சிரமமில்லாமல் வாங்கி சிறுகக் கட்டி பெருக வாழலாம்....

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News