கேஸ் சிலிண்டர்கள் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு

கேஸ் சிலிண்டர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் லட்சங்கள் சம்பாதிக்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 9, 2022, 07:49 AM IST
  • கேஸ் சிலிண்டர்கள் மூலம் சம்பாதிக்கலாம்
  • ஏஜென்சி எடுப்பதன் மூலம் நல்ல லாபம் இருக்கிறது
  • ஆனால் குறைந்தபட்ச முதலீடு தேவை
கேஸ் சிலிண்டர்கள் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு  title=

Gas Agency Dealership: நீங்களும் ஒரு தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், கேஸ் சிலிண்டர் டீலர்ஷிப்பை எடுத்துக்கொண்டு எப்படி நல்ல பணம் சம்பாதிக்கலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். Petro Gas Energy India Limited மூலம் டீலர்ஷிப் வழங்கப்படுகிறது. அதில் விண்ணப்பித்து நல்ல உங்களின் தொழிலைத் தொடங்கலாம்.

டீலர்ஷிப் வழங்கும் நிறுவனம்

பெட்ரோ கேஸ் எனர்ஜி இந்தியா லிமிடெட் பெட்ரோலிய எரிபொருளை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் பல வணிகங்களைக் கொண்டுள்ளது. எல்பிஜி எரிவாயு டீலர்ஷிப்பை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கேஸ் இருக்க வேண்டும் என்ற நோக்கில், தங்களின் மார்க்கெட்டை திட்டமிட்டு விரிவுபடுத்த தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க | Bank Holidays: செப்டம்பர் மாதம் 14 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!!

யார் விண்ணப்பிக்கலாம்?

* விண்ணப்பதாரர் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் 10வது தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.
* இது தவிர, வயது 21 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் எண்ணெய் நிறுவனத்தில் பணியாளராக இருக்கக்கூடாது

என்னென்ன அவசியம்?

இந்த டீலர்ஷிப்பை எடுத்த பிறகு, சிறிய இடத்தில் தொடங்க முடியாது. இதனால், உங்களுக்கு ஒரு நல்ல இடம் இருக்க வேண்டும். இது தவிர, உங்களிடம் ஆவணங்களும் இருக்க வேண்டும். இந்த ஏஜென்சியை நடத்த உங்களுக்கு 10 உதவியாளர்களும் தேவை. இது தவிர, குடோன் இருப்பது அவசியம்.

மேலும் படிக்க | விமான பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் டிக்கெட் தொகை குறையக்கூடும்!!

கூடுதல் தகவல்கள்

உங்களிடம் சொந்தமாக நிலம் இருந்தால், நீங்கள் எரிவாயு ஏஜென்சியின் ஒப்பந்தத்தை எடுக்க, நீங்கள் சுமார் 5 முதல் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். பெட்ரோகாஸின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://petrogas.co.in/-ஐப் பார்வையிடுவதன் மூலம் டீலர்ஷிப்பைப் பெறலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

முகப்புப் பக்கத்தில், டீலர்ஷிப் என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள், அதனை கிளிக் செய்தால் மேலும் ஒரு படிவம் திறக்கப்படும். இப்போது நீங்கள் படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு நிறுவனம் தொடர்பு கொள்ளும்.

வருமானம் எப்படி இருக்கும் 

இந்த டீலர்ஷிப்பில் லாபம் பற்றி பேசினால், இதில் சிலிண்டருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பல தொழிலதிபர்கள் காஸ் சிலிண்டர் டீலர்ஷிப் மூலம் பெரும் பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் உங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News