Budget 2024-25 வரவு செலவு கணக்கு மதிப்பீடு செய்யும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

Budget 2024-25: இந்திய அரசின் பொது பட்ஜெட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. வரவு செலவு கணக்கு மதிப்பீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்குகின்றன  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2023, 05:32 PM IST
  • பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்கின
  • பாஜக அரசின் இறுதி பட்ஜெட்
  • மக்களவை தேர்தல் நடைபெறுவதால், இடைக்கால பட்ஜெட் இது
Budget 2024-25 வரவு செலவு கணக்கு மதிப்பீடு செய்யும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது title=

பட்ஜெட் 2024-25 முன்னேற்பாடுகள்: பொது பட்ஜெட்டுக்கான கூட்டங்களின் சுற்று தொடங்குகிறது, நிதி அமைச்சகம் மதிப்பீட்டு வரைவுக்கான முன் பட்ஜெட் கூட்டத்தை நடத்தும். மானியங்கள்/ஒதுக்கீடு நிதி தொடர்பான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 2023-24 மற்றும் பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25 ஆகியவற்றை இறுதி செய்வதற்கான பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதங்கள் தொடங்கவிருக்கின்றன. 

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு முன் வரவிருக்கும் பாஜக அரசின் இறுதி பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 10ஆம் தேதி முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புகள் தொடர்பாக நிதி அமைச்சகம் அக்டோபர் 10-ம் தேதி முதல் கூட்டம் நடத்தப்படுவதாக, நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் துறை செய்தி வெளியிட்டுள்ளது. மானியங்கள் தொடர்பான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 2023-24 மற்றும் பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25 ஆகியவற்றை இறுதி செய்ய நிதிச் செயலர் மற்றும் செயலர் (செலவு) தலைமையில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் திட்டமிட்டபடி தொடங்கிவிட்டன.

இடைக்கால பட்ஜெட்

செப்டம்பர் 20, 2023 அன்று அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிவிப்பில், அவர்களுடனான சந்திப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களில், அமைச்சகங்கள் அல்லது துறைகளின் வரவுகளுடன் அனைத்து வகையான செலவினங்களுக்கும் தேவையான நிதிகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வழங்கும் கடைசி பட்ஜெட் இதுவாக இருக்கும். அதாவது, பொதுத்தேர்தல் முடிவடைந்த பின், புதிய நிதியமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அப்போது நிதியமைச்சராக யார் வருவார்கள் என்பதை சொல்ல முடியாது என்பதால், இது நிர்மலா சீதாராமனின் இந்த ஆட்சியின் கடைசி வரவு செலவு கணக்கு தாக்கல் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?

அரசுத் துறைகள் தங்கள் பட்ஜெட் முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது சிக்கனக் கொள்கையை மனதில் கொள்ளுமாறு நிதித் துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 5, 2023க்குள் கூட்டத்திற்குத் தேவையான விவரங்களை அமைச்சகங்களும் துறைகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள் அக்டோபர் 10 முதல் தொடங்கி நவம்பர் 14 வரை தொடரும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும்.

2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட், பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும். இதற்கு முன், செப்டம்பர் முதல் வாரத்தில், பட்ஜெட் தயாரிக்கும் பணியை துவங்கும் போது, ​​நிதி அமைச்சகம், அரசின் பல்வேறு துறைகளிடம் செலவு விவரங்களை கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகள், இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு தற்காலிகமாக இறுதி செய்யப்படும். அதேபோல, இந்தக் கூட்டங்களின் போது, ​​அமைச்சகங்கள் அல்லது துறைகளின் ரசீதுகளுடன் அனைத்து வகை செலவினங்களுக்கும் எவ்வளவு நிதி தேவை என்பது தொடர்பாக விவாதிக்கப்படும்.

மேலும், வரி அல்லாத வருவாயின் பாக்கிகள் மற்றும் பட்ஜெட் புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட வரி அல்லாத வருவாய்கள் ஆகியவை தொடர்பான விவாதங்களும் நடைபெறும். 2024 பொதுத்தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

மேலும் படிக்க | நிம்மதியான ரிட்டயர்மெண்ட் வாழ்க்கைக்கு பெஸ்ட் ஓய்வூதிய திட்டம்! டாப் 5 திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News