Dearness Allowance | 54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?

Central Government Staff Da Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு 54% அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியாக இருக்கிறது.  

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 24, 2024, 06:45 PM IST
Dearness Allowance | 54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது? title=

DA Hike Announcement 2024: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி குறித்து முக்கிய அறிவிப்பை அறிவிக்கும் என எதிர்பார்ப்பு.

மக்களவைத் தேர்தல் 2024

நாட்டில் மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடந்து முடிந்து, கடந்த ஜூன் மாதம் நான்காம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

மீண்டும் பிரதமர் மோடி

மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கென்று பல நல்ல செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசிபிஏஐ குறியீட்டு தரவுகள்

ஜூலை 2024 முதல் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏசிபிஏஐ குறியீட்டு (AICPI  Index) தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு என்பது குறைந்தபட்சம் 4% அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

அதன் அடிப்படையில் ஜூலை முதல் அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 54% ஆக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

எட்டாவது ஊதியக் கமிஷன்?

அகவிலைப்படி உயர்வைத் தவிர எட்டாவது ஊதியக் கமிஷன் குறித்தும் நல்ல செய்தி கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக அடுத்த ஊதிய குழுவிற்கான கோரிக்கை இருந்து வரக்கூடிய நிலையில், விரைவில் பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

அகவிலைப்படி 54 சதவீதம் உயரும்.

ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏசிபிஐ குறியீட்டு தரவு அடிப்படையில் அகவிலைப்படி குறைந்தபட்சம் 4% அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஜூலை முதல் அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 54% ஆக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ அதிகரிக்கப்பட்டால், இது அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கும். இதன் காரணமாக சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். 

மவுனம் காக்கும் மத்திய அரசு

2024 ஜூலை 1 முதல் அகவிலைப்படி 4% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 54% ஆகுமா? அல்லது அகவிலைப்படி என்பது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு புதிய கணக்கீடு தொடங்குமா? அல்லது எட்டாவது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா? என்பது குறித்து இன்னும் சஸ்பென்சாகவே இருக்கிறது. 

எதுவாக இருப்பினும் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்தில் பெரும் ஏற்றம் என்பது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News