வரி செலுத்துவபர்களுக்கு ஹேப்பி நியூஸ், நிதியமைச்சர் வெளியிட்ட பெரிய அறிவிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தை ரீஃபண்ட் தரப் பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 15, 2022, 09:27 AM IST
  • வருமான வரி ரீஃபண்ட்.
  • பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா.
  • வருமான வரி தாக்கல்.
வரி செலுத்துவபர்களுக்கு ஹேப்பி நியூஸ், நிதியமைச்சர் வெளியிட்ட பெரிய அறிவிப்பு  title=

2022-23 நிதியாண்டுக்கான ரீஃபண்ட் பணத்தை வருமான வரித் துறையால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நாட்களில் வருமான வரித்துறை அளித்த தகவலில், இதுவரை ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான வருமான வரித் தொகை வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரீஃபண்ட் தொகை ஏப்ரல் முதல் வரி செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. எனவே உங்கள் ரீஃபண்ட் தொகை வந்திருக்கிறதோ இல்லையோ, என்பதை அறிய, ரீஃபண்ட் ஸ்டேட்டஸை சரிபார்க்க வேண்டும்.

வருமான வரித்துறை ரிட்டர்ன்களை வழங்கி வருகிறது
ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு, ஏதேனும் ரீஃபண்ட் செய்யப்பட்டால், அது வருமான வரித் துறையால் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். இதன் கீழ், வருமான வரித்துறை தொடர்ந்து பணத்தை திருப்பி அளித்து வருகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான ரீஃபண்ட் பணம் தரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? அப்டேட் இதோ

66.92 சதவீதம் கூடுதல் ரீஃபண்ட் பணம் வழங்கப்பட்டது
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரீபண்ட் தொகை 66.92 சதவீதம் அதிகமாகும். முன்னதாக, அக்டோபர் 8, 2022 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.1.53 லட்சம் கோடி திருப்பி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

உங்கள் ரீஃபண்ட் ஸ்டேட்டஸை இப்படி சரிபார்க்கவும்
* முதலில், வரி செலுத்துவோர் வருமான வரித் துறையின் www.incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

* இப்போது பான், ஆதார் எண் அல்லது பயனர் ஐடியை உள்ளிட்ட பிறகு பாஸ்வேர்ட் மூலம் லாகின் செய்யவும்.

* இங்கே e-file விருப்பத்தின் கீழ் வருமான வரி அறிக்கைக்குச் செல்லவும். இதற்குப் பிறகு, ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்ட பார்வை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* இப்போது தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய ஐடிஆர் சரிபார்த்து விவரங்களைப் பார்க்கச் செல்லவும்.

* உங்கள் ரீஃபண்ட் ஸ்டேட்டஸ் இங்கே தோன்றும். இதில், எந்தத் தேதியில் பணம் ரீஃபண்ட் பெறப்பட்டது அல்லது எந்தத் தேதியில் பணம் ரீஃபண்ட் செய்யபடும் என்ற தகவல் கிடைக்கும்.

மேலும் படிக்க | வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? எந்த ஆவணங்கள் தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News