பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) உறுப்பினர்கள் ஏதேனும் புகார்களை பதிவு செய்யும் வகையில் இபிஎஃப்ஓ ஆனது இபிஎஃப் புகார் மேலாண்மை அமைப்பை அமைத்துள்ளது. இனி இபிஎஃப்ஓ-வின் உறுப்பினர்கள் இபிஎஃப் திரும்பப் பெறுதல், இபிஎஃப் கணக்குப் பரிமாற்றங்கள் போன்ற இபிஎஃப் கணக்கு தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக இந்த இணையதளத்தில் புகார்களை பதிவு செய்துகொள்ளலாம். இந்த இபிஎஃப் புகார் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் இபிஎஃப்ஓ சேவைகள் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை கண்டறிந்து தீர்ப்பதற்காகவே ஆகும். நாட்டின் எந்த பகுதியிலிருந்து வேண்டுமானாலும் புகார்களை பதிவு செய்யலாம், புகார்களை நேரடியாக தலைமை அலுவலகம் அல்லது நாடு முழுவதும் உள்ள 135 கள அலுவலகங்களில் பதிவு செய்யலாம்.
இபிஎஃப் புகார் மேலாண்மை அமைப்பின் அம்சங்கள்:
-இபிஎஃப் தொடர்பான புகார் அல்லது குறைகளை பிஎஃப் உறுப்பினர்கள், இபிஎஃஎஸ் ஓய்வூதியம் பெறுபவர், வேலை வழங்குபவர் என அனைவரும் புகார் செய்யலாம்.
-நினைவூட்டல்களை அனுப்பும் வசதி
-குறைகளின் நிலையைச் சரிபார்க்கும் வசதி
- புகார் தொடர்பான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆவணங்களை வழங்குதல்
மேலும் படிக்க | Jackpot! பழைய அரிய ‘ரூபாய் நோட்டுக்களை’ விற்று லட்சாதிபதியாக ஆவது எப்படி..!!
இபிஎஃப் தொடர்பான பிரச்சனைக்கு புகாரளிக்கும் செயல்முறை :
- (https://epfigms.gov.in/) என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- புகார் பதிவு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிஎஃப் உறுப்பினர், இபிஎஃப் ஓய்வூதியம் பெறுபவர் போன்ற உங்கள் புகாரைத் தாக்கல் செய்வதற்கான நிலையைத் தேர்வு செய்யவும்.
- யூஏஎன் பாஸ்வேர்டு மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
- விவரங்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்ததும், உங்கள் விவரங்கள் திரையில் காட்டப்படும்.
- அதன் பிறகு ஓடிபி பெறு என்பதைக் கிளிக் செய்ததும் ஓடிபி அனுப்பப்படும்.
- இப்போது பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓ டிபி-ஐ உள்ளிடவும்.
- இப்போது சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் தனிப்பட்ட தகவலை உள்ளிட வேண்டும்.
- பிஎஃப் கணக்கு எண்ணைத் தேர்வு செய்யவும்
- புகார் வகையைத் தேர்ந்தெடுக்கவும்
- புகார் விளக்கத்தை உள்ளிடவும்.
- புகார் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
- இறுதியாக பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகிய இரண்டிற்கும் ஒரு பதிவு எண் அனுப்பப்படும்.
புகாரின் நிலையைச் சரிபார்க்கும் செயல்முறை :
- (https://epfigms.gov.in/) என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- 'வியூ ஸ்டேட்டஸ்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது பதிவு எண்ணை உள்ளிடவும்
- பாஸ்வேர்டு அல்லது மொபைல் எண் / மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
- பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்
- இப்போது புகாரின் நிலை, புகாரைக் கையாளும் அலுவலகம் மற்றும் அதிகாரியின் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும்.
புகார் குறித்த நினைவூட்டல்களை அனுப்பும் செயல்முறை:
- புகாரைப் பதிவுசெய்த 30 நாட்களுக்குப் பிறகு நினைவூட்டலை அனுப்பலாம்.
- (https://epfigms.gov.in/) என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- 'நினைவூட்டல்' என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- பதிவு எண்ணை உள்ளிடவும்.
- பாஸ்வேர்டு அல்லது மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
- பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
- சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! கிராஜூட்டி, ஓய்வூதியம் பறிக்கப்படலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ