ITR Filing Last Date: கடைசி தேதி மற்றும் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்!

ITR Filing Last Date: 2022-23 (AY23) மதிப்பீட்டு ஆண்டுக்கான ஐடிஆர் தாக்கலை இப்போது வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் செய்துகொள்ள முடியும்.  

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2022, 12:09 PM IST
  • ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பொதுவாக ஜூலை 31 ஆகும்.
  • ஐடிஆர் தாக்கல் இப்போது வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் செய்துகொள்ள முடியும்.
  • 'படிவம் 16' ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
ITR Filing Last Date: கடைசி தேதி மற்றும் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்! title=

ITR Filing Last Date: 2021-22 நிதியாண்டிற்கான உங்கள் வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வந்துவிட்டது.  வருடாந்திர ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பொதுவாக ஜூலை 31 ஆகும்.   வருமான வரித்துறை, வரி செலுத்துவோர்களை எஸ்எம்எஸ், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு தளங்கள் மூலம் நினைவுபடுத்தி வருகிறது.  பெரும்பாலான நேரங்களில், கடைசி நிமிடத்தில் தாக்கல் செய்யும்போது சர்வர் பிரச்சனை ஏற்பட்டால் உங்களால் தகுந்த நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யமுடியாமல் போய்விடும்.  அதனால் கடைசி தேதிக்கு முன்னதாகவே ஐடிஆரை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

 

மேலும் படிக்க | Free LPG Cylinder: ரேஷன் கார்டு இருக்கா? அப்போ இலவச எல்பிஜி சிலிண்டர் பெறலாம்

2022-23 (AY23) மதிப்பீட்டு ஆண்டுக்கான ஐடிஆர் தாக்கல் இப்போது வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் செய்துகொள்ள முடியும்,  ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.  'படிவம் 16' என்பது சம்பளம் வாங்குபவர்களுக்கு ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.  நாட்டில் உள்ள ஒவ்வொரு முதலாளியும், வருமான வரி பிடித்தம் செய்துள்ள சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 'படிவம் 16'ஐ வழங்க வேண்டும்.  இது கழிக்கப்பட்ட வரியைக் (டிடிஎஸ்) காட்டும் சான்றிதழாகும், மேலும் முந்தைய நிதியாண்டில் பணியாளருக்கு செலுத்தப்பட்ட சம்பளத்தின் விவரங்களையும் கொண்டுள்ளது.

படிவம் 16 இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது - பகுதி A மற்றும் B.  பகுதி A ஆனது நிதியாண்டில் ஒரு முதலாளியால் கழிக்கப்பட்ட வருமான வரியைக் கொண்டுள்ளது.  இது பணியாளரின் நிரந்தர கணக்கு எண் (பிஏஎன்) விவரங்கள் மற்றும் பணியமர்த்துபவர்களின் வரி விலக்கு கணக்கு எண் (டிஏஎன்) ஆகியவற்றைக் காட்டுகிறது.  படிவம் 16-ன் பகுதி B, பணியாளரின் மொத்த சம்பளத்தின் தகவலைக் கொண்டுள்ளது. 'படிவம் 26AS' என்பது தகவல் தொழில்நுட்பத் துறையால் தயாரிக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த வரி அறிக்கையாகும்.  வரி செலுத்துவோர் தங்கள் பான் விவரங்களை கொடுப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையின் இ-போர்ட்டலில் இருந்து இதை அணுகலாம்.  இந்த ஆவணத்தில் சம்பளம் பெறும் வகுப்பினரின் டிடிஎஸ் தொகை மற்றும் நிதியாண்டில் செலுத்தப்பட்ட வரிகள் உள்ளன.

ஐடிஆரைத் தாக்கல் செய்யும் போது, ​​வரி செலுத்துவோர் தங்களது 'படிவம் 26AS'ஐ பார்த்து, மத்திய அரசின் கருவூலத்திற்குச் செலுத்திய வரித் தொகையை அவர்களின் 'படிவம் 16' உடன் கணக்கிட வேண்டும்.  முந்தைய நிதியாண்டில் மனிதவளத் துறையில் தங்கள் வரிச் சேமிப்புக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காத வரி செலுத்துவோர், வரி விலக்குகளைப் பெறுவதற்கு நேரடியாக தகவல் தொழில்நுட்பத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  இதில் ஆயுள் காப்பீடு (எல்ஐசி) செலுத்திய பிரீமியம் ரசீது, மருத்துவக் காப்பீட்டு ரசீது, பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்), 5 ஆண்டு எஃப்டி ரசீதுகள், பரஸ்பர நிதி முதலீடு (இஎல்எஸ்எஸ்), என்எஸ்சி, வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் சான்றிதழ்/ அறிக்கை, நன்கொடை செலுத்திய ரசீது, கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது போன்றவை.

பிரிவு 80C இன் கீழ் பெறக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1.5 லட்சம் ஆகும், அதே சமயம் தனிநபர், சுய, மனைவி மற்றும் குழந்தைகளுக்கான உடல்நலக் காப்பீட்டில் பிரிவு 80D இன் கீழ் ரூ.25,000 கழிக்க முடியும்.  60 வயதுக்கு குறைவான பெற்றோரின் உடல்நலக் காப்பீட்டிற்கான கூடுதல் விலக்கு ரூ.25,000 வரை கிடைக்கும்.  பெற்றோர் 60 வயதுக்கு மேல் இருந்தால், விலக்கு தொகை ரூ 50,000 ஆகும்.  சம்பள வருமானத்தைத் தவிர, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து சேமிப்பு கணக்கு வைப்பு மற்றும் எஃப்டி போன்ற பல்வேறு வட்டி முதலீடுகளிலிருந்தும் வருமானம் பெறுகிறார்.  அத்தகைய நிதி நிறுவனங்கள் தங்கள் வைப்புத்தொகையாளர்களுக்கு வட்டி சான்றிதழ்கள் / வங்கி அறிக்கைகளை வழங்குகின்றன. ஒரு தனிநபர், வங்கி/அஞ்சலகத்தில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கிலிருந்து சம்பாதித்த வட்டியில் வருமான வரிச் சட்டத்தின் 80TTA பிரிவின் கீழ் விலக்கு கோரலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News