கிறிஸ்துமஸ் விடுமுறையில் டூர் செல்ல திட்டமா... ‘இந்த’ நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை!

சுற்றுலாத் துறை எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது. உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 11, 2023, 01:44 PM IST
  • சுற்றுலா செல்ல தொட்டமிட்டுள்ள மக்களுக்கு மேலும் ஒரு சந்தோஷம் அளிக்கும் செய்தி.
  • இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசா வழங்க இந்தோனேசிய அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
  • நாட்டின் பொருளாதாரத்தில் பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் டூர் செல்ல திட்டமா...  ‘இந்த’ நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை! title=

சுற்றுலாத் துறை எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது. உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. சுற்றுலா துறையே நம்பி இருக்கும் சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு. அந்த வகையில், சமீபத்தில் இலங்கை, மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்திய பயணிகளை ஈர்க்கும் நோக்கில், தங்கள் நாட்டுக்கு வருகை தர விசா தேவை இல்லை என்று அறிவித்தன. இலங்கை அரசு, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் பயணிகளுக்கு வரும் ஐந்து மாத காலங்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் சுற்றுலா செல்ல தொட்டமிட்டுள்ள மக்களுக்கு மேலும் ஒரு சந்தோஷம் அளிக்கும் செய்தியாக, தாய்லாந்து, இலங்கை மற்றும் மலேசியாவை அடுத்து, இந்தோனேசியாவும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை என அறிவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்தோனேசியாவின் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த முடிவை ஒரு மாதத்திற்குள் அங்கீகரிக்கக் கூடும் என தெரிகிறது.

இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசா வழங்க இந்தோனேசிய அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்க அந்நாட்டு சுற்றுலா அமைச்சகமும் இந்த முடிவை எடுத்துள்ளது. உண்மையில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள். "தற்போதுள்ள விசா விலக்குகள் உள்ள நாடுகளைத் தவிர்த்து, அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது" என்று இந்தோனேசியாவின் சுற்றுலா அமைச்சர் சந்தியாகா சலாவுதீன் யூனோ கூறினார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே குறிக்கோள்

20 நாடுகளில் இலவச நுழைவு விசா வழங்குவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நாட்டின் பொருளாதாரத்தில் பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இது உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று அமைச்சர் கூறினார். "நாங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம், குறிப்பாக உள்ளூர் பொருளாதாரத்தில் அதிகம் அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் நீண்டகால சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

இந்தியாவுடன் வேறு சில நாடுகளின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற பயணிகளுக்கு இலவச நுழைவு விசா வழங்க இந்தோனேசிய அமைச்சகம் முன்மொழிந்த 20 நாடுகளில் அடங்கும். தற்போது, 25 நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன. சமீபத்தில், மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்திய குடிமக்களுக்கு விசா இலவச நுழைவு வழங்குவதாக அறிவித்தன.

மேலும் படிக்க | இன்று முதல் இந்த 5 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை! 

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் இந்தோனேசியாவிற்கு வந்தனர். அதே நேரத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, 9.49 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தோனேசியாவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 124 சதவீதம் அதிகரித்துள்ளது.

தாய்லாந்து  & இலங்கை

இலங்கை சுற்றுலாத்துறையை அதிகம் நம்பி இருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா துறையை அதிகம் நம்பி இருக்கும் மற்றொரு நாடான தாய்லாந்தும், இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்தது. மேலும், தாய்லாந்து செல்லும் இந்தியர்கள், விசா (Visa) இல்லாமல் 30 நாட்கள் தங்கி இருக்கலாம் என்றும் விதிகளை தளர்த்தி உள்ளது. இந்த தளர்வு, 2024 மே பத்தாம் தேதி வரை அமலில் இருக்கும்.

வியட்னாம் 

வியட்னாமும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய நாடுகளில் மிகவும் அழகான நாடு என்று கருதப்படும் வியட்நாம், கடற்கரைகள் ஆறுகள் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடமாகும். வியட்நாம் சுமார் 25க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு வியட்நாம் வர விசா தேவையில்லை என்று விரைவில் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, ஜெர்மனி, பிரான்ஸ் , ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வியட்நாம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களும் விசா இல்லாமல் விரைவில் வியட்நாம் செல்லலாம்.

மேலும் படிக்க - India Vs Canada: இந்தியா கனடா விசா மோதல்களும் முடிவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News