ரயில் பயணிகள் கவனத்திற்கு; இன்று இந்த ரயில்கள் ஓடாது

இந்திய ரயில்வே: பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக் காரணங்களுக்காக செப்டம்பர் 15 அன்று 250க்கும் மேற்பட்ட ரயில்களை IRCTC ரத்து செய்கிறது; முழு பட்டியலை இங்கே பார்க்கவும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 15, 2022, 10:47 AM IST
  • IRCTC செப்டம்பர் 15 அன்று 250 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது
  • பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு பணிகள் காரணமாக ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது
  • முழு பட்டியலை இங்கே பார்க்கவும்
ரயில் பயணிகள் கவனத்திற்கு; இன்று இந்த ரயில்கள் ஓடாது title=

ரயில் பயணத்தை நம்பித்தான் பலரின் தினசரி வேலை உள்ளது. ரயில் பயணம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகின்றன, அன்றைய நாளில் எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் விரும்பிய இடத்துக்கு விரும்பிய ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இந்தியாவில் வாகனப் போக்குவரத்துக்கு இணையாக ரயில் போக்குவரத்தை நம்பி பயணம் செய்வோர் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணம் செய்கின்றனர்.

இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) செப்டம்பர் 15 அன்று பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக மொத்தம் 315 ரயில்களை ரத்து செய்துள்ளது. ரயில்வே பகிர்ந்துள்ள புதுப்பிப்பின்படி, செப்டம்பர் 15 அன்று புறப்படவிருந்த 253 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன, 62 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலில் டெல்லி, ஹவுரா, கான்பூர், பதிண்டா மற்றும் பல நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் உள்ளன.

மேலும் படிக்க | IRCTC Tour: IRCTC டூர் பேக்கேஜ் அறிமுகம்; அனைத்தும் இலவசம்

இந்திய ரயில்வே செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய ரயில்வேயால் செப்டம்பர் 15 இன்று நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் ரயில்வே துறை, இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) இணையதளத்தில் சமீபத்திய அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 250 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் குறித்துத் தெரிந்துகொள்வதற்குக் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும். 

* https://www.irctchelp.in/cancelled-trains-list/

இன்று பயணம் செய்வதற்குமுன் உங்கள் ரயில் குறித்து விவரங்களை செக் செய்து கொண்டு பயணிக்கவும். எனவே செப்டம்பர் 15 அன்று ஐஆர்சிடிசி ரத்து செய்த ரயில்களின் முழுப் பட்டியல் இதோ:

இதற்கிடையில் செப்டம்பர் 16 ஆம் தேதி மொத்தம் 286 ரயில்களை ரத்து செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! ரயில்வே டிக்கெட்டிலும் மானியமா... அமைச்சர் வெளியிட்ட தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News