ரூ 7.50 லட்சம் வருமானமா? வரி எவ்வளவு? கேள்வியே தேவையில்லை! NO TAX

Income Tax Clarification:  7.27 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும், ரூ.50,000 நிலையான விலக்கு உண்டு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2024, 04:28 PM IST
ரூ 7.50 லட்சம் வருமானமா? வரி எவ்வளவு? கேள்வியே தேவையில்லை! NO TAX title=

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வருமான வரி விலக்கு மூலம் சம்பளம் பெறும் வகுப்பினர் மிகவும் பயனடைந்துள்ளனர். புதிய வரி விதிப்பைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கான வருமான வரிச் சலுகை (Income Tax Rebate) ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 7.50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்று கூறியிருந்தார்.

ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். சம்பளம் பெறுபவர்களுக்கு ஃபார்ம் 16ஐ வேலை கொடுத்த முதலாளி கொடுப்பார். நடுத்தர மக்களுக்கு வருமான வரியிலிருந்து நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 

பிப்ரவரி 1, 2023 அன்று பட்ஜெட் உரையின் போது, ​​புதிய வரி முறையின் கீழ் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ஆண்டுக்கு 7.50 லட்சம் ரூபாய் வரை நிலையான விலக்குடன் வருமானம் ஈட்டுபவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்று கூறியிருந்தார்.

இந்த விதியை அமல்படுத்திய பிறகு, ரூ.7 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் நிலை என்னவாகும் என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது என்று நிதியமைச்சர் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | நீயா நானா? முகேஷ் அம்பானியை முந்தி ஆசியாவின் பெரிய பணக்காரர் பட்டம் வென்றார் கெளதம் அதானி!

இதனை அடுத்து விளக்கம் அளித்த நிதியமைச்சர், 7.27 லட்சம் வரை நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டாம் என்றும், பிரேக் ஈவன் ரூ.27,000 மட்டுமே என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது 7.27 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும், ரூ.50,000 நிலையான விலக்கு உண்டு என்றும் நிதியமைச்சர் கூறியிருந்தார். இதன் மூலம், புதிய வரி விதிப்பு தொடர்பான மக்களின் சந்தேகங்களையும் அரசு தெளிவுபடுத்தியது.

புதிய வரி விதிப்பு முறை
2020-21 நிதியாண்டில் முதல் முறையாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதம் குறைவாக உள்ளது ஆனால் இதன் கீழ் சில வரி விலக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஆண்டு வருமானம் ரூ 0-3 லட்சத்திற்குள் இருந்தால் வரி செலுத்தத் தேவையில்லை. அதன்பிறகு, ரூ.3 முதல் 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரியும், ரூ.6 முதல் 9 லட்சம் வரை வருமானம் இருந்தால் 10 சதவீதமும், ரூ.9 முதல் 12 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15 சதவீதமும், ரூ.12 முதல் 15 வரை வருமானம் இருந்தால் 20 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். 15 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதம்.

பழைய வரி முறை 
பழைய வரி விதிப்பில், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. இதன்படி, வரி செலுத்துவோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5% வீதம் வரி செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருந்தால், அதற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆனால் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்படும். ஆனால் இந்த முறையின் கீழ் பல வகையான வரிச் சலுகைகளைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | மூன்றே ஆண்டுகளில் 92 இருந்து 726 ரூபாயாக உயர்ந்த பங்குவிலை! பட்டை கிளப்பும் அதானி குழுமம்!

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News