PM Matritva Vandana Yojana: மத்திய அரசு ஒரு சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு அரசாங்கம் இனி நிதி உதவியை தரப்போகிறது. அதுவும் 1000, 2000 இல்லை முழுமையாக 6000 ரூபாய் வழங்கப்படும். அதன்படி இந்த அரசு திட்டத்தின் பெயர் மாத்ரித்வா வந்தனா யோஜனா ஆகும். இந்த திட்டத்தின் கீழ் அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திருமணமான பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த திட்டத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள்.
பெண்களுக்கு நிதி உதவி
இந்த அரசாங்கத் திட்டத்தின் பெயர் மாத்ரித்வா வந்தனா யோஜனா ஆகும், இதன் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கக்கூடாது, மேலும் எந்த விதமான நோயும் ஏற்படக்கூடாது என்கிற நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுடன் அரியர் தொகையும் வரும்...மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
>> கர்ப்பிணிப் பெண்களின் வயது 19 ஆக இருக்க வேண்டும்.
>> இந்த திட்டத்தில் நீங்கள் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
>> இந்த திட்டத்தில் அரசு 6000 ரூபாயை 3 தவணைகளில் அனுப்பி வைக்கும்.
>> இந்த திட்டம் கடந்த ஜனவரி 1, 2017 அன்று மோடி அரசால் தொடங்கப்பட்டது.
பணம் எப்படி அனுப்பபடும்?
இத்திட்டத்தில், கர்ப்பிணிகளுக்கு முதல் கட்டமாக 1000 ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2000 ரூபாயும், மூன்றாம் கட்டமாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதே சமயம் கடைசி தவணை 1000 ரூபாயை குழந்தை பிறக்கும் போது அரசு மருத்துவமனையில் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ எண்ணில் தொடர்பு கொள்ளவும்
இதனிடையே இந்தத் திட்டத்தில் ஏதேனும் சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், உடனடியாக அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைன் எண்ணான 7998799804ஐத் தொடர்புகொள்ளலாம். அரசிடம் இருந்து பெறப்படும் தொகை நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.
பிற தகவலுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சரிபார்க்கவும்
https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இங்கே பெறுவீர்கள்.
மேலும் படிக்க | முதலில் DA உயர்வு..இப்பொது மற்றொரு ஜாக்பாட் செய்தி ஊழியர்களுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ