ஜாக்பாட் செய்தி: Post Office RD வட்டி விகிதங்களில் ஏற்றம்.. இனி பம்பர் லாபம் காணலாம்

Recurring Deposit Interest Rates: ஒரு முதலீட்டாளர் இப்போது ரூ. 2000, ரூ. 3000 அல்லது ரூ. 5000 மாதாந்திர RD ஐத் தொடங்கினால், புதிய வட்டி விகிதங்களுடன் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 03:27 PM IST
  • மத்திய அரசின் நிதி அமைச்சகம் சிறுசேமிப்பு திட்டங்களில் பெறப்படும் வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறது.
  • இதற்குப் பிறகு அடுத்த காலாண்டிற்கான வட்டித் திருத்தம் செய்யப்படுகிறது.
  • இந்த பண்டிகைக் காலத்தில், 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை மட்டும் அரசு மாற்றியுள்ளது.
ஜாக்பாட் செய்தி: Post Office RD வட்டி விகிதங்களில் ஏற்றம்.. இனி பம்பர் லாபம் காணலாம் title=

Recurring Deposit Interest Rates: அஞ்சல் அலுவலக ரெக்கரிங்க் டெபாசிட், அதாவது போஸ்ட் ஆபிஸ் RD இல் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பண்டிகைக் காலத்தில், தபால் நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, அதாவது இன்று முதல் அமலுக்கு வரும். 5 வருட RD க்கு இதுவரை 6.5 சதவிகித வட்டி கிடைத்து வந்தது. ஆனால் அக்டோபர் 1 முதல் இதில் 6.7% வட்டி கிடைக்கும். அரசு இதன் வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகள் (20 Base Points) உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், ஒரு முதலீட்டாளர் இப்போது ரூ. 2000, ரூ. 3000 அல்லது ரூ. 5000 மாதாந்திர RD ஐத் தொடங்கினால், புதிய வட்டி விகிதங்களுடன் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2,000 ரூபாய் முதலீடு செய்தால்

ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மாதம் 2,000 ரூபாய் RD (Recurring Deposit) -இல் முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் 24,000 ரூபாய் மற்றும் 5 ஆண்டுகளில் 1,20,000 ரூபாய் முதலீடு செய்வார். அத்தகைய சூழ்நிலையில், புதிய வட்டி விகிதத்துடன் அதாவது 6.7% வட்டியுடன் ரூ.22,732 வட்டியாக கிடைக்கும். இந்த வகையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீட்டாளர் முதலீடு செய்த தொகையும் வட்டித் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.1,42,732 கிடைக்கும்.

3,000 ரூபாய் முதலீடு செய்தால்

ஒருவர் மாதம் ரூ.3,000 ஆர்டி தொடங்க விரும்பினால், ஒரு வருடத்தில் ரூ.36,000 முதலீடு செய்வார். மேலும் 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,80,000 முதலீடு செய்வார். போஸ்ட் ஆபிஸ் ஆர்டி (Post Office Recurring Deposit)  கால்குலேட்டரின் படி, புதிய வட்டி விகிதங்களின்படி, அவர் ரூ. 34,097 வட்டியாகப் பெறுவார். மேலும் முதிர்ச்சியின் போது மொத்தம் ரூ.2,14,097 கிடைக்கும்.

மேலும் படிக்க | 8th Pay Commission: 44% ஊதிய உயர்வு... புதிய சூத்திரத்துடன் வருகிறதா புதிய ஊதியக்குழு?

5,000 ரூபாய் முதலீடு செய்தால்

ஒருவர் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் RD ஐத் தொடங்கினால், 5 ஆண்டுகளில் மொத்தம் 3,00,000 ரூபாய் முதலீடு செய்வார். போஸ்ட் ஆபிஸ் ஆர்டி கால்குலேட்டரின் படி, 6.7% வட்டியில் ரூ.56,830 அவருக்கு கிடைக்கும். இந்த வழியில், அவர் முதிர்வு காலத்தில் ரூ.3,56,830 பெறுவார். 

மூன்று மாதங்களுக்கும் வட்டி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்படும்

மத்திய அரசின் நிதி அமைச்சகம் சிறுசேமிப்பு திட்டங்களில் (Small Saving Schemes) பெறப்படும் வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறது. இதற்குப் பிறகு அடுத்த காலாண்டிற்கான வட்டித் திருத்தம் செய்யப்படுகிறது. இந்த பண்டிகைக் காலத்தில், 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை மட்டும் அரசு மாற்றியுள்ளது. மீதமுள்ள திட்டங்களுக்கு பழைய வட்டி விகிதங்கள் தொடரும். கடந்த சில காலாண்டுகளில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY) மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) ஆகியவற்றின் வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. ஆனால், ஏப்ரல் 1, 2020 முதல் பிபிஎஃப் விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO Higher Pension: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி... வந்தது புதிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News