எல்ஐசி-ல் கிரெடிட் கார்ட் வைத்திருந்தால் இவ்வளவு நன்மைகளா?

LIC Credit Card: எல்ஐசி மற்றும் ஆக்சிஸ் வங்கி இணைந்து எல்ஐசி சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, எல்ஐசி பிளாட்டினம் கிரெடிட் கார்டு மற்றும் எல்ஐசி டைட்டானியம் கிரெடிட் கார்டுஎன மூன்று வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.  

Written by - RK Spark | Last Updated : Jan 9, 2023, 07:41 AM IST
  • 2022 நிதியாண்டின் இறுதியில் எல்ஐசியின் பங்கு 63.25 சதவீதமாக இருந்தது.
  • எல்ஐசி நம்பிக்கையான முதலீடாக உள்ளது.
  • எல்ஐசி தற்போது கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது.
எல்ஐசி-ல் கிரெடிட் கார்ட் வைத்திருந்தால் இவ்வளவு நன்மைகளா?  title=

LIC Credit Card: நாட்டு மக்களின் நம்பிக்கையான முதலீட்டு நிறுவனமாக திகழும் எல்ஐசி தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் எல்ஐசியின் சந்தைப் பங்கு 67.72 சதவீதமாகவும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் சந்தைப் பங்கு 32.28 சதவீதமாகவும் இருந்தது.  2022 நிதியாண்டின் இறுதியில் காப்பீட்டு சந்தையில் எல்ஐசியின் பங்கு 63.25 சதவீதமாகவும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் சந்தைப் பங்கு 36.75 சதவீதமாகவும் இருந்தது.  எல்ஐசி பாலிசி எடுத்திருக்கும் பாலிசிதாரர்கள் பிரீமியம் தொகையை டெபாசிட் செய்யும்போது உங்களது எல்ஐசி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி டெபாசிட் செய்யலாம்.  இவ்வாறு நீங்கள் எல்ஐசி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி டெபாசிட் செய்யும்பொழுது உங்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி கார்ட்ஸ் சர்வீசஸ் லிமிடெட் என்பது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 100% துணை நிறுவனமாகும்.  இது  ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி போன்ற வங்கிகளுடன் இணைந்து எல்ஐசி இணை முத்திரை கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது.  இந்த கார்டுகளின் மூலம் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கப்பெறும் மற்றும் இந்த கடன் அட்டைகள் வாழ்நாள் முழுவதும் இலவசம்.  இந்த கார்டை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு பாராட்டு புள்ளிகள் கிடைக்கும், இது தவிர கார்டை பயன்படுத்தி பிரீமியத்தை டெபாசிட் செய்யும் போது உங்களுக்கு ​​ரிவார்டு பாயின்ட் வடிவில் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.  எல்ஐசி மற்றும் ஆக்சிஸ் வங்கி இணைந்து மூன்று வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.  அவற்றின் பெயர்கள்-எல்ஐசி சிக்னேச்சர் கிரெடிட் கார்டு, எல்ஐசி பிளாட்டினம் கிரெடிட் கார்டு மற்றும் எல்ஐசி டைட்டானியம் கிரெடிட் கார்டு.  இப்போது இந்த கார்டுகளின் மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்க | குறைந்த முதலீட்டில் SBI மூலம் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு!

எல்ஐசி சிக்னேச்சர் கிரெடிட் கார்டு:

எல்ஐசி சிக்னேச்சர் கிரெடிட் கார்டில் டெபாசிட் செய்யப்பட்ட பிரீமியத்தில் ரூ.100க்கு 2 ரிவார்டு புள்ளிகளும், மற்ற வகைகளில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.100-க்கும் 1 ரிவார்டு பாயிண்ட் கிடைக்கும்.  இதனை தொடர்ந்து கிரெடிட் கார்டின் வரம்பிற்கு இணையான இலவச காப்பீடு கிடைக்கிறது.  தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக தனிநபருக்கு ரூ.5 லட்சம் வரையிலும் மற்றும் விமான விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.1 கோடி வரையிலும் காப்பீடு கிடைக்கும்.  இந்த கார்டில் கூடுதலாக ரூ.400 முதல் ரூ.4000 வரையுள்ள எரிபொருள் கட்டணத்திற்கு 1 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

எல்ஐசி பிளாட்டினம் கிரெடிட் கார்டு:

எல்ஐசி பிளாட்டினம் கிரெடிட் கார்டிலும் இதே வசதி உள்ளது, அதாவது நீங்கள் பிரீமியமாக ரூ.100 டெபாசிட் செய்தால் 2 ரிவார்டு பாயிண்ட்கள், இலவச லாஸ்ட் கிரெடிட் கார்டு காப்பீடு கிடைக்கிறது.  இதில் தனிநபர் விபத்துக் காப்பீடு ரூ.3 லட்சமாகவும், விமான விபத்துக் காப்பீடு ரூ.1 கோடியாகவும் கிடைக்கிறது.  மேலும் கூடுதலாக எரிபொருள் கட்டணத்திற்கு 1 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது, இதன் மூலம் நீங்கள் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.400 பெறலாம்.

எல்ஐசி டைட்டானியம் கிரெடிட் கார்டு:

எல்ஐசி டைட்டானியம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி எல்ஐசி பிரீமியம் ரூ.100 டெபாசிட் செய்வதற்கு 2 ரிவார்டு பாயிண்ட்கள் மற்றும் பிரீமியம் அல்லாத செலவுகளுக்குச் செலவழிக்கும் ஒவ்வொரு ரூ.100க்கும் 1 ரிவார்டு பாயிண்ட் கிடைக்கும்.  ஆனால் இதில் உங்களுக்கு இந்த வசதி எரிபொருள், வாலெட் மற்றும் இஎம்ஐ டிரான்ஸாக்ஷன்களுக்கு கிடைக்காது.  இதில் உங்களுக்கு இலவச லாஸ்ட் கிரெடிட் கார்டு காப்பீடு கிடைக்கிறது.  மேலும் கூடுதலாக எரிபொருள் கட்டணத்திற்கு 1 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | பெண்களுக்கு அதிக வட்டி விகிதங்களை தரும் வங்கி! எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News