கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள்,  இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 25, 2024, 11:40 AM IST
  • அக்டோபர் மாதத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன?
  • மக்கள் மீது இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்?
  • முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள் title=

Major Changes From October 1, 2024: செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் சில  முக்கிய மாற்றங்கள் செய்யபட்டு புதிய செயல்முறைகள் நடைமுறைக்கு வரும். இவற்றின் தாக்கம் நிதி ரீதியாகவோ அல்லது செயல் ரீதியாகவோ மக்கள் மீது நிச்சயம் இருக்கும். அந்த வகையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதலும், பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்கள் மீது கண்டிப்பாக இருக்கும். 

அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள்,  இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) தொடர்பான சிறப்பு அறிவிப்புகளும் இந்த மாதம் வரக்கூடும். அக்டோபர் மாதத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? மக்கள் மீது இவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? முழுமையான விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

எல்பிஜி சிலிண்டர் விலை 

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டர் விலையை (LPG Cylinder Price) அரசு மாற்றுகிறது. வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படலாம். இம்முறையும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போனஸ் பங்குகள் 

பங்குச் சந்தை (Share Market) செயல்பாடுகளில் ஒரு புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) போனஸ் பங்குகளின் வர்த்தகத்தை சீராக்க புதிய கட்டமைப்பை செயல்படுத்தியுள்ளது. அக்டோபர் 1, 2024 முதல், போனஸ் பங்குகள் T+2 டிரேடிங்கிற்குத் தகுதிபெறும். இதன் மூலம் ரெகார்ட் செய்யப்பட்ட தேதிக்கும், அவை கிரெடிட் செய்யப்பட்டு வர்த்தகம் செய்யப்பட தகுதி பெறும் தெதிக்கும் இடையிலான நேரம் குறைக்கப்படும்.

ஆதார் அட்டை

அக்டோபர் 1, 2024 முதல், நிரந்தரக் கணக்கு எண்ணுக்கு (PAN) விண்ணப்பிக்கும்போதோ அல்லது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போதோ தனிநபர்கள் தங்களது ஆதார் (Aadhaar)பதிவு ஐடியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA, ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அனைவரும், ஜூலை 1, 2017 முதல் அதை PAN விண்ணப்பப் படிவம் மற்றும் வருமான வரிக் கணக்குகளில் குறிப்பிட வேண்டும் என்று பட்ஜெட் குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. 

சிறுசேமிப்புத் திட்டங்கள்

தபால் அலுவலகங்கள் மூலம் தேசிய சிறுசேமிப்பு (NSS) திட்டங்களின் கீழ் முறையற்ற வழியில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கற்ற கணக்குகளை முறைப்படுத்த அவற்றை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஒழுங்கற்ற என்எஸ்எஸ் கணக்குகள் (NSS Accounts), சிறார்களின் பெயரில் திறக்கப்பட்ட பிபிஎஃப் கணக்குகள் (PPF Accounts), பல பிபிஎஃப் கணக்குகள், வெளிநாடு வாழ் இந்தியர்களால் நீட்டிக்கப்பட்ட பிபிஎஃப் கணக்குகள்,  பாதுகாவலர்களுக்குப் பதிலாக தாத்தா பாட்டிகளால் திறக்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி திட்ட கணக்குகளின் (Sukanya Samriddhi Yojana) முறைப்படுத்துதல் உள்ளிட்ட ஆறு முக்கிய வகைகளுக்கு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

பத்திரப் பரிவர்த்தனை வரி (STT): 

அக்டோபர் 1, 2024 முதல், பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஃப்யூசர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவு (F&O) வர்த்தகத்தின் மீதான செக்யூரிடி ட்ரான்சாக்‌ஷன் வரி உயரும். 2024 யூனியன் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாற்றங்கள், வளர்ந்து வரும் டெரிவேடிவ்ஸ் சந்தையில் ஊக வர்த்தகத்தை மிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆப்ஷன் சேலில் விற்பனை மீதான STT பிரீமியத்தில் 0.0625% முதல் 0.1% வரை அதிகரிக்கும். 

மேலும் படிக்க | டிஏ ஹைக்: 53%-54% அகவிலைப்படி உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் நல்ல செய்தி

இந்திய ரயில்வே

பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு எதிராக இந்திய இரயில்வே (Indian Railways) சிறப்பு செயல்பாட்டைத் தொடங்கும். வரவிருக்கும் பண்டிகை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத பயணங்களைத் தடுக்கவும், கடுமையான டிக்கெட் சோதனை நடைமுறைகளை அமல்படுத்தவும் ரயில்வே அமைச்சகம் இந்த முயற்சியை அறிமுகப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம்:

அக்டோபர் 1, 2024 முதல், தேசிய சிறுசேமிப்பு (என்எஸ்எஸ்) திட்டங்களின் (Post Office Small Saving Schemes) கீழ் உள்ள தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு காலாண்டிலும் இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கமான அக்டோபர் 1 ஆம் தேதி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது. 

நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் 2024: 

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம் 2024 (Direct Tax Vivad Se Vishwas Scheme 2024), அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது. ஜூலை 22, 2024 முதல் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் பிற மேல்முறையீட்டு அதிகாரிகளின் முன் நிலுவையில் உள்ள மேல்முறையீடுகள் மற்றும் மனுக்கள் உட்பட அனைத்து தகராறுகளையும் தீர்க்க, வரி செலுத்துவோரை அனுமதித்து, அதன் மூலம் மூலம் வருமான வரி வழக்குகளைக் குறைக்க இந்தத் திட்டம் உள்ளது

மேலும் படிக்க | Dearness Allowance | 54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News