புது காதலர்கள், புதுமண ஜோடி அவசியம் இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க - சண்டையே வராது

Relationship Tips | புது காதலர்கள், புதுமண தம்பதிகளாக இருந்தால் இந்த டிப்ஸை பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையில் பிரிவு என்பதே வராது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2024, 03:27 PM IST
  • திருமண வாழ்கையில் வெற்றி பெறுவது எப்படி?
  • காதல் வாழ்கையில் பிரச்சனை வராமல் இருக்க
  • இங்கிருக்கும் டிப்ஸ்களை உங்களுக்கு உதவும்
புது காதலர்கள், புதுமண ஜோடி அவசியம் இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க - சண்டையே வராது title=

Relationship Tips for Love and Newly Weds | காதல் மற்றும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைப்பது என்பதே ஒருவிதமான புது அனுபவம் தான் எல்லோருக்கும். வார்தையில் விவரிக்க முடியாத அந்த உறவு நீண்ட நாட்களுக்கு நீடிப்பதும், ஓரிரு வாரங்கள் அல்லது ஆண்டுகளில் முடிவுக்கு வருவதும் அவரவர் அணுகுமுறையில் தான் இருக்கிறது. காதலாக இருந்தாலும், திருமணமாக இருந்தாலும் உங்களுக்கு பிடித்தமானவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எப்போதும் ஒரு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவு முறையில் யார் ஒருவர் தவறு செய்தாலும், இன்னொருவரின் அன்பான அணுகுமுறை சிக்கலான ரிலேஷன்ஷிப்பையும் சூப்பராக மாற்றிவிடும். ஆனால், சிக்கலை தீர்த்துக் கொள்ள வேண்டியது இருவரின் பொறுப்பு.  

சரி, உங்களுக்கு பிடித்தமானவர் எப்போதும் இருக்க வேண்டும் என விரும்பினால் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். செய்ய வேண்டியதை சிறப்பாக செய்தாலே தவறுகள் கூட பெரியதாக இருக்காது. இருவருக்குள்ளும் சண்டைகள் வராது. அப்படியே வந்தாலும் கொஞ்ச நேரத்தில் சேர்ந்துவிடுவீர்கள். கோபத்தைக் காட்டிலும் உங்களிடம் அன்பே பெரிதாக இருக்கும். 

மேலும் படிக்க | குளிர்காலத்தில் வீட்டை கதகதப்பாக வைத்துக்கொள்வது எப்படி? ஈசி டிப்ஸ்!

நேரத்தை செலவிட வேண்டும்

எப்போதும் உங்களுக்கு பிடித்தமானவருடன் போதுமான நேரத்தை செலவிடுவதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயங்களில் அன்பை வெளிப்படுத்துங்கள். பிடித்தமானவர்களிடம் மட்டுமே நீங்கள் குழந்தையாக இருக்க முடியும். அதனால் உங்களின் குழந்தை குணத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கவும். அன்பு, அரவணைப்பு, புரிந்து கொள்வது, விட்டுக்கொடுத்தல் எல்லாமே உறவில் இருக்க வேண்டும். இருவருக்கும் அது பொருந்தும். 

பயணத்தை திட்டமிடவும்

எப்போதும் கிடைக்கும் நேரங்களில் பயணம் செல்வதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். புதுப்புது இடங்களுக்கு சர்பிரைஸாக அழைத்துச் செல்லுங்கள். புது இடங்களில் ஒருவர் மீது ஒருவர் இயல்பாகவே அன்பை அதிகம் செலுத்துவீர்கள். ஒருவரின் பாதுகாப்பில் இன்னொருவர் அதீத அக்கறை கொள்வீர்கள். இது இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். புதிய அனுபவங்கள் நிறைய கிடைக்கும். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்கள் பயணம் செல்ல முடியவில்லை என்றாலும் ஒருநாள் மட்டுமே செல்லக்கூடிய பயணத்தையாவது திட்டமிட்டு சென்று வாருங்கள். 

தெளிவான பேச்சு

உறவில் எப்போதும் தெளிவான பேச்சு அவசியம். கனிவாக பேச வேண்டும், அதேநேரத்தில் சொல்வது அழகாகவும் ஆணித்தரமாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு இடத்திலும் குழப்பான நிலையில் இருக்கவே கூடாது. ஒரு செயலை செய்வதற்கு முன் அதன் அனைத்து கோணங்களையும் முன்பே அலசி ஆராய்ந்து அந்த விஷயத்தை செய்யுங்கள். பிறந்த நாள் சர்பிரைஸாக இருந்தால் கூட அதனை ஏற்பாடு செய்வதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். அதில் உண்மையில் உங்கள் பார்ட்னர் இம்பர்ஸ் ஆக வேண்டும். அதனால் எப்போதும் உறவில் ஒருவரை இன்னொருவர் இம்பரஸ் செய்து கொண்டு இருப்பதில் தான் சுவாரஸ்யம் மிகுந்து இருக்கும். இதுதவிர எல்லா சூழ்நிலைகளிலும் கூடவே இருப்பது என்பது காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் முக முக்கியம். அந்த நம்பிக்கையை கொடுத்துவிட்டால் உங்களின் உறவு எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும். 

மேலும் படிக்க | 2025-ல் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 7 புத்தகங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News