)
Vignesh Shivan Deactivates His Twitter X : தமிழ் திரையுலகில், ஒரே ஒரு ஹிட் படம் மூலம் மிகப்பிரபலமான இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார் விக்னேஷ் சிவன். இவரை கடந்த இரண்டு நாட்களாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தை இவர் டெலிட் செய்திருக்கிறார்.
விக்னேஷ் சிவனை வைத்து செய்த நெட்டிசன்கள்:
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவனை, தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக்கிய படம், நானும் ரெளடி தான். இந்த படத்தை அடுத்து, அவர் எடுத்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. இன்னும் சில மாதங்களில் அவர் எடுத்துள்ள LIK படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகின.
நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிராப் ஆனது. இது குறித்து, அந்த நேர்காணலில் பேசிய விக்கி, தன் கதைக்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ளாததால் அப்படம் கைவிடப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தான் அஜித்திற்காக எழுதி வைத்திருந்த கதை, ஆவேஷம் படம் போல இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
விக்கி பேசிய சர்ச்சை பேச்சு..
அஜித் குறித்து மட்டுமல்ல, தனது முந்தைய படங்கள் குறித்து விக்கி பேசியதும் இணையத்தில் வைரலானது. காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை, தன்னை கேட்காமல் அப்படத்தின் தயாரிப்பாளர் ஓடிடிக்கு நேரடியாக விற்றதாகவும், இதை தெரிந்து சண்டை போட்டு பின்னர் அதனை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வைத்ததாகவும் கூறினார். தற்போது அதே தயாரிப்பாளர்தான், விக்கியின் அடுத்த படமான LIK படத்தையும் தயாரிக்கிறார்.
அஜித், நானும் ரெளடி தான் படத்தை பல முறை பார்த்தாக தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இது நடந்தது, என்னை அறிந்தால் படத்திற்கு பாடல் எழுதிய சமயத்தில் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த படம், நானும் ரெளடி தான் படத்திற்கு முன்பே ரிலீஸாகி விட்டது. இதையடுத்து, விக்கி பொய் கூறுவதாக பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
கணக்கை டெலிட் செய்தார்:
X தள சமூகம் விக்னேஷ் சிவனை லெஃப்ட் அன்ட் ரைட் வைத்து செய்ததை தொடர்ந்து, அவர் தனது கணக்கையே முடக்கி விட்டார். நேற்று இரவு முதல், அவரது ட்விட்டர் கணக்கு செயல்படவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அந்த நேர்காணல் வெளியாவதற்கு முன்னரே, விக்கி-நயன் vs தனுஷ் பிரச்சனையினால் ரசிகர்கள் பலர் விக்கியின் மீது வன்ம மழை பொழிந்து வந்தனர். என்ன பேசினாராே அதற்கு மட்டும் கலாய்ப்பதை விட்டுவிட்டு பர்சனலாக அட்டாக் செய்ய ஆரம்பித்தனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர், ட்விட்டர் எக்ஸ் தளத்தை டெலிட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், அவர் கணக்கை யாரெனும் ஹேக் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ