Indian Railways: ரயில் பயண திட்டத்தில் திடீர் மாற்றம்

Indian Railways Reservation latest rules: ரயிலில் உங்கள் பயண டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல், வேறு நாளில் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 21, 2022, 11:50 AM IST
  • டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
  • ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்த புதிய வசதிகள்
  • முன்பதிவு செய்த பயண தேதியை எப்படி மாற்றுவது?
Indian Railways: ரயில் பயண திட்டத்தில் திடீர் மாற்றம் title=

இந்திய ரயில்வே நம் நாட்டின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே சேவையின் மூலம் தினமும் சுமார் 40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். அதன்படி ரயிலில் பயணம் செய்யும் போது, ​​ஒவ்வொரு பயணிகளும் தங்கள் பயணம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை உறுதிப்படுத்த நமது இந்திய ரயில்வே பல புதிய திட்டங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது. அதன்படி தற்போது இந்திய ரயில்வே அறிமுகம் செய்த ஒரு முக்கிய வசதியைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அது என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

 இந்திய ரயில்வே அறிமுகம் செய்த இந்த வசதியைப் பற்றி பெரும்பாலான பயணிகள் அறிந்திருக்க மாட்டார்கள். இருப்பினும், இந்த வசதி பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், உங்கள் பயண டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாக செலவாது. அதன்படி ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்வது என்பது இப்போது சுலபமாகிவிட்டது. அதேபோல், பயணம் செய்ய முடியாத சூழ்நிலையில் நாம் முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்வதும் இப்போது சுலபமாகிப் போனது. அந்தவகையில் ரயிலில் உங்கள் பயண டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது பணம் வீணாகாமல், வேறு நாளில் அந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்.

மேலும் படிக்க | இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் முறையில் எல்பிஜி சிலிண்டர்களை புக் செய்வது எப்படி? 

தேதியை எப்படி மாற்றுவது?
அசல் போர்டிங் நிலையத்தின் நிலைய மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பதன் மூலமோ அல்லது ரயில் புறப்படுவதற்குக் குறைந்தது 24 மணிநேரத்திற்கு முன்னதாக கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையத்திற்குச் செல்வதன் மூலமோ பயணிகள் பயணத்தின் போர்டிங் நிலையத்தை மாற்றிக்கொள்ள இந்திய ரயில்வே இப்போது உங்களை அனுமதிக்கிறது. இந்த வசதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டு வகை டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரயில்வே விதிகளின்படி, நீங்கள் பயணிக்கவிருந்த முன்பதிவு டிக்கெட்டில் கூறப்பட்டுள்ள நேரம் அல்லது நாளில் உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் ரயில் பயணத்தை ரத்து செய்வதற்குப் பதிலாக, உங்கள் பயணத்தை 'முன்கூட்டி' அல்லது 'பிற்போக்கு' செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பயணத்தின் போர்டிங் நிலையத்தையும் கூட நீங்கள் மாற்றலாம்.

அதேபோல் முன்பதிவு செய்த ஸ்டேஷனில் இறங்காமல், உங்கள் பயணத்தைத் தொடர விரும்பினால், அதில் மாற்றம் செய்துகொள்ளவும் உங்களுக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, பயணிகள் இலக்கை அடையும் முன் அல்லது முன்பதிவு முடிந்ததும் டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். கண்டிப்பாக இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்

இந்திய ரயில்வேயின் இணையதளத்தின்படி, ஸ்டேஷன் கவுண்டரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை பயணத் தேதியில் ஒருமுறை மட்டுமே 'முன்கூட்டி' அல்லது 'பிற்போக்கு' செய்ய முடியும். இருக்கைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதா அல்லது RAC அல்லது காத்திருப்பு உள்ளதா என்ற விஷயங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு நீங்கள் விரும்பிய நாளில் மாற்றி தரப்படும். பயணத் தேதியை நீட்டிக்க அல்லது முன்பதிவு செய்ய, பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு அலுவலகத்திற்குச் சென்று தனது டிக்கெட்டைச் சமர்ப்பிக்க வேண்டும், ஆனால் இந்த வசதி ஆஃப்லைன் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும்

அதே இலக்குக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் வேறு நாள் பயணம் செய்ய அனுமதிப்பதோடு, பயணிகள் தங்கள் பயணத்தை நீட்டிக்கவும், தங்கள் பயணத்தின் போர்டிங் ஸ்டேஷனை மாற்றவும் மற்றும் உயர் வகுப்பிற்கு தங்கள் டிக்கெட்டுகளை மேம்படுத்தவும் இந்திய ரயில்வே அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News