மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய விலை நிலவரம்!

பெட்ரோல், டீசல் விலையில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நிவாரணம் அளித்து வருகின்றன. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  

Written by - RK Spark | Last Updated : Jul 23, 2023, 05:11 PM IST
  • ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு $81.07 ஆகும்.
  • WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு $77.07 ஆகவும் உள்ளது
  • தங்கம் போன்று எரிபொருளும் நிலையில்லா விலை தன்மையை உடையது.
மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? இன்றைய விலை நிலவரம்! title=

Petrol Diesel Prices Today: டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் விலைகள் சீராகவே உள்ளன. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $80ஐத் தாண்டிய போதிலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு $81.07 ஆகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு $77.07 ஆகவும் உள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.62 ஆகவும் உள்ளது. மே 2022 முதல் நாட்டில் எண்ணெய் விலை நிலையானது என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும், நாட்டின் சில பகுதிகள் சிறிய ஏற்ற இறக்கங்களை சந்தித்தன. ஞாயிற்றுக்கிழமை நாட்டின் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெளியிட்ட புதிய பட்டியலின்படி, மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை 25 காசுகளும், டீசல் விலை 24 காசுகளும் அதிகரித்துள்ளது. மறுபுறம், பஞ்சாபில் பெட்ரோல் விலையில் 32 பைசாவும், டீசல் விலை 30 பைசாவும் குறைந்துள்ளது. கேரளா மற்றும் ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது, ஒடிசாவில் குறைந்துள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. அரியர் தொகையும் வரி விலக்கும் கிடைக்கும்

சில நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விலையை பார்க்கலாம்

பெங்களூரு:

பெட்ரோல் விலை: ரூ.101.94

டீசல் விலை: ரூ.87.89

சண்டிகர்:

பெட்ரோல் விலை: ரூ.96.20

டீசல் விலை: ரூ.84.26

சென்னை:

பெட்ரோல் விலை: ரூ.102.73

டீசல் விலை: ரூ.94.33

குருகிராம்:

பெட்ரோல் விலை: ரூ.96.77

டீசல் விலை: ரூ.89.65

கொல்கத்தா:

பெட்ரோல் விலை: ரூ.106.03

டீசல் விலை: ரூ.92.76

நொய்டா:

பெட்ரோல் விலை: ரூ.96.64

டீசல் விலை: ரூ.89.82

மும்பை:

பெட்ரோல் விலை: ரூ.106.31

டீசல் விலை: ரூ.94.27

ஹைதராபாத்:

பெட்ரோல் விலை: ரூ.109.66

டீசல் விலை: ரூ.89.62

பெட்ரோல் மற்றும் டீசலின் இறுதி விலையை நிர்ணயிப்பதில் எண்ணெய் விலையில் தினசரி ஏற்படும் இந்த மாற்றங்கள் முக்கியமானவை. கச்சா எண்ணெயின் உண்மையான விலைக்கு மேல் கலால் வரி, டீலர் கமிஷன், வாட் மற்றும் பிற கட்டணங்களைச் சேர்ப்பதால், சில்லறை விலை கணிசமாக அதிகமாக உள்ளது.

எரிபொருள் விலையை எப்படி அறிவது?

தினசரி பெட்ரோல், டீசல் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் நகரக் குறியீட்டுடன் 9224992249 என்ற எண்ணிற்கும், BPCL வாடிக்கையாளர்கள் RSP யை 9223112222 க்கும் அனுப்பலாம். HPCL வாடிக்கையாளர்கள் HP விலையை 9222201122 க்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Post Office Scheme: தபால் அலுவலகத்தில் இத்தனை முதலீடு திட்டங்கள் இருக்கிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News