புதுடெல்லி: 2,000 ரூபாய் நோட்டை மாற்ற கடைசி தேதி செப்டம்பர் 30 என்ற ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று முதல் உயர்மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும். இந்த கரன்சி நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு செப்டம்பர் 30, 2023 அன்று கடைசித் தேதி என ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்தது. எனவே ₹ 2,000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள், இன்று (2023, செப்டம்பர் 30 சனிக்கிழமை) முதல் புழக்கத்தில் இருக்காது. அது மற்றொரு காகிதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியானது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயிற்சியை முடிப்பதற்கும் பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்குவதற்கும் செப்டம்பர் 30, 2023 அன்று கடைசித் தேதியாக நிர்ணயித்திருந்தது.
ரூ. 2000 நோட்டு: திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என ரிசர்வ் வங்கி முதலில் நிர்ணயித்தது. 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.2,000 ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் உள்ள இந்த நாணயத் தாள்களில் 93 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக மத்திய வங்கி செப்டம்பர் 1 ஆம் தேதி தெரிவித்தது. ஆகஸ்ட் 31-ம் தேதி வர்த்தகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் ரூ.0.24 லட்சம் கோடியாக இருந்தது. 3.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள், அதாவது புழக்கத்தில் இருந்த 88 சதவிகிதம், ஜூலை 31-ம் தேதிக்குள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன.
முன்னதாக, மே 19 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) ரூ. 2,000 கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தனது ‘க்ளீன் நோட் பாலிசி’-யின் ஒரு பகுதியாக இதை வங்கி குறிப்பிட்டது. வங்கிகள் இந்த நோட்டுகளை மக்களுக்கு வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.
ரிசர்வ் வங்கி மே மாதம் அதிக மதிப்புள்ள நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற மத்திய வங்கி முடிவு செய்ததில் இருந்து கடந்த மாத தொடக்கம் வரை ₹ 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 93 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியதாக ஆர்பிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தங்களிடம் உள்ள ₹ 2,000 நோட்டுகளை வங்கிக் கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் பிராந்திய கிளைகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ அறிவுறுத்தப்பட்டது. கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ₹ 20,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | ரூ. 2000 நோட்டு முக்கிய அறிவிப்பு... காலக்கெடுவை நீட்டிக்கிறதா ரிசர்வ் வங்கி?
₹ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, முதன்மையாக பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து ₹ 500 மற்றும் ₹ 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலை திரும்பப் பெறப்பட்டது.
மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் ₹ 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. அதனால், 2018-19ல் ₹ 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டததைத் தொடர்ந்து, வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கத்தை அதிகரிக்க ஐசிஆர்ஆர் (ICRR - இன்கிரிமென்டல் கேஷ் ரிசர்வ் ரேஷியோ) ஐ ஆர்பிஐ அறிமுகப்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ