2014-க்கு பின் இந்தியா கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்கம்...

திங்களன்று (ஜனவரி 12) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக நவம்பர் மாதத்தில் இது 5.54%-மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated: Jan 13, 2020, 07:51 PM IST
2014-க்கு பின் இந்தியா கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்கம்...
Representational Image

திங்களன்று (ஜனவரி 12) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக நவம்பர் மாதத்தில் இது 5.54%-மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஜூலை 2014-க்குப் பிறகு இந்தியா கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்க வீதமாகும்.

பணவீக்கம் அதிகரித்து வருவதால் மொத்தம் 135 அடிப்படை புள்ளிகளைக் கொண்ட ஐந்து வெட்டுக்களைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கிய பின்னர் பிப்ரவரி 6-ஆம் தேதி மத்திய வங்கி தனது அடுத்த வட்டி விகித முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பதில் எண்ணெய் விலை உயர்வு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக செப்டம்பர் தொடங்கி இந்த நிலைமை நீடிக்கிறது. முதல் முறையாக கடந்த வாரம் எண்ணெய் பீப்பாய்க்கு 70 டாலருக்கு மேல் உயர்ந்தது.

குறிப்பிடத்தக்க வகையில், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. இந்நிலையில் எண்ணெய் இறக்குமதி இந்தியாவின் சில்லறை பணவீக்கத்தினை பெரிதும் பாதித்துள்ளது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள், 2019 டிசம்பரில் உணவு பணவீக்கம் 14.12% ஆகவும், காய்கறி பணவீக்கம் 60.5% ஆகவும் உயர்ந்துள்ளது. முக்கிய பணவீக்கம் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த வாரம் விலை நிர்ணயம் என்பது மத்திய வங்கியின் முதன்மை நோக்கமாகும், ஏனெனில் பணவீக்கம் அதிகரித்து வருவது ஏழைகளின் வாழ்க்கையை விகிதாசாரமாக பாதிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உயர் வரம்பு பணவீக்க இலக்கு 4 (+2) ஐ மீறியுள்ள நிலையில், பணவீக்கத்தின் "மிக அதிகமான" வீதத்தின் ரிசர்வ் வங்கியின் கணிப்பும் நிறைவேறியுள்ளது.

ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் கொள்கை மதிப்பீட்டில் ஒரு ரெப்போ வீதக் குறைப்புக்கு எதிராக முடிவெடுத்திருந்தாலும், பணவீக்கம் தொடர்ந்து மூன்று மாதங்களாக அதிகரித்து வருவதால் மத்திய வங்கியின் அடுத்த நகர்வைக் காண்பது சுவாரஸ்யமாக இருக்கும் என கூறப்படுகிறது.