SBI அளித்த shock: வட்டி விகிதங்கள் அதிகரித்தன, தாக்கம் என்னவாக இருக்கும்? விவரம் உள்ளே!!

மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் (5 Basis Points) கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 10, 2021, 06:39 PM IST
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
  • SBI வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன்களின் மாதத் தவணை அதிகரிக்கும்.
  • SBI நீண்ட காலத்திற்குப் பிறகு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
SBI அளித்த shock: வட்டி விகிதங்கள் அதிகரித்தன, தாக்கம் என்னவாக இருக்கும்? விவரம் உள்ளே!! title=

SBI Loan Rate: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதன் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. வங்கியின் இந்த நடவடிக்கை சாமானியர்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். SBI வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன்களின் மாதத் தவணை அதிகரிக்கும்.

தகவல்களின்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அடிப்படை வீதத்தை 0.10 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. SBI பிரதான கடன் விகிதத்தை (Prime Lending Rate) 0.10 சதவீதம் அதிகரித்து 12.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இருப்பினும், MCLR விகிதத்தில் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.

SBI நீண்ட காலத்திற்குப் பிறகு வட்டி விகிதங்களை (Interest Rates) அதிகரித்துள்ளது. சில காலமாக, வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைத்துக்கொண்டிருந்தது.

பெண்களுக்கான வீட்டுக் கடனின் விகிதம் குறைந்தது

இரண்டு நாட்களுக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்கான வீட்டு வட்டி விகிதங்களை SBI குறைத்தது. இதனுடன் வங்கி பல கூடுதல் சலுகைகளையும் வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களுக்கு பெண்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் (5 Basis Points) கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, நகைகள் வாங்குவதிலும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

சமீபத்தில், SBI வீட்டுக் கடன் துறையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதில் மொத்த சந்தையில் 34 சதவீதத்தை SBI வைத்திருக்கிறது. SBI இதுவரை மொத்தம் 5 லட்சம் கோடி வரை கடன் வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கையை 2024 க்குள் 7 லட்சம் கோடியாக உயர்த்துவதே SBI-யின் இலக்காகும்.

ALSO READ: SBI YONO வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. இந்த சிறப்பு சலுகை வெறும் 4 நாட்கள் மட்டுமே!

SBI-யின் SME தங்க கடன்

SBI-யின் தங்க கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆகையால் இதன் பெயர் SME Gold Loan என வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம். SBI-யின் இந்த சலுகையின் மூலம், வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். SBI அவ்வப்போது பல சலுகைகளை அறிவிக்கின்றது. ஆனால், இந்த குறிப்பிட்ட சலுகை SME துறைக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதம்

SBI-யின் இந்த சிறப்பு தங்க கடன் (Gold Loan) சலுகை 7.25 சதவீதம் என்ற மிகக் குறைந்த ஆண்டு வட்டி விகிதத்திலேயே கிடைக்கிறது. இதை இந்த வகையில் புரிந்துகொள்ளலாம். நீங்கள் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் தங்கக் கடனை எடுத்தால், இதற்கான வட்டியாக 7,250 ரூபாயை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். தனது SME Gold Loan-னின் வட்டி விகிதம் மற்ற அனைத்து வங்கிகளையும் விட குறைந்தது என்றும், இதில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் SBI கூறுகிறது.

ALSO READ: SBI Power Demat Account: அதிரடி கடன் வசதி, இலவச ATM Card, இன்னும் எக்கச்சக்க offers

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News