SBI Net Banking-க்கு ஆன்லைனில் பதிவு செய்வது இவ்வளவு Easy-யா? எளிய வழிகள் இதோ..

நீங்கள் SBI-யின் வாடிக்கையாளராக இருந்து இணைய வங்கி வசதியைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு நீங்கள் முதலில் உங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2020, 05:47 PM IST
  • SBI இணைய வங்கி சேவை இயக்கப்பட்ட பிறகு, ஆன்லைனிலேயே நிலுவை, பரிவர்த்தனை விவரங்கள், வங்கி கணக்கு அறிக்கை ஆகியவற்றை சரிபார்க்க முடியும்.
  • ஆன்லைன் பரிவர்த்தனைகள், எஃப்.டி மற்றும் ஆர்.டி ஆகியவை தொடர்பான பணிகளையும் ஆன்லைனில் செய்யலாம்.
  • நீங்கள் வங்கிக்குச் செல்லாமலேயே காசோலை புத்தகத்தையும் ஆர்டர் செய்ய முடியும்.
SBI Net Banking-க்கு ஆன்லைனில் பதிவு செய்வது இவ்வளவு Easy-யா? எளிய வழிகள் இதோ.. title=

புது தில்லி: COVID-19 தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியமானது. இந்த தொற்றுநோயால் பணமில்லா பரிவர்த்தனைகளின் போக்கு அதிகரித்துள்ளது. ஏனென்றால், மக்கள் வங்கிகள், ATM-கள் போன்ற பொது இடங்களுக்கு முடிந்தவரை செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் இணைய வங்கியைப் பயன்படுத்துவதற்கான போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியாவுக்கான ஊக்கத்தை அரசாங்கம் அளித்து வருகிறது. நேரத் தேவைக்கேற்ப வங்கிகள் தங்கள் வலைத்தளம் மற்றும் செயலியின் மூலம் ஆன்லைனில் பல்வேறு வங்கி வசதிகளை வழங்குகின்றன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI-யும் வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி (Net Banking) வசதியை வழங்குகிறது.

நீங்கள் SBI-யின் வாடிக்கையாளராக இருந்து இணைய வங்கி வசதியைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு நீங்கள் முதலில் உங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இப்போது இணைய வங்கிக்கான பதிவு பெரும்பாலான வங்கிகளால் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கும் அத்தகைய வசதியை வழங்கியுள்ளது. இதன் கீழ் நீங்கள் இணைய வங்கியினை பதிவு செய்வதற்காக வங்கி கிளைக்குக் கூட செல்லத் தேவையில்லை. இதை உங்கள் ATM அட்டை மூலம் ஆன்லைனிலேயே செய்யலாம்.

ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் onlinesbi.com மூலமாகவும் நீங்கள் இணைய வங்கி சேவைக்கு பதிவு செய்யலாம். இருப்பினும், இங்கே நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இணைய வங்கி சேவைக்கு பதிவு செய்ய, உங்கள் ATM அட்டை, கணக்கு எண், சிஐஎஃப் எண், கிளை குறியீடு மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை உங்களிடம் இருக்க வேண்டும்.

ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!

SBI-ன் இணைய வங்கி சேவைக்கு நீங்கள் இந்த முறையில் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

1.முதலில், SBI-ன் onlinesbi.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

2.இங்கே Personal Banking பிரிவில், 'New User Registration’-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

3.இப்போது நீங்கள் புதிய பக்கத்தில் கணக்கு எண், சிஐஎஃப் எண், கிளைக் குறியீடு போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

4.இதற்குப் பிறகு நீங்கள் 'Submit’ என்ற பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் மொபைல் எண்ணில் OTP பெறப்படும்.

5.இப்போது OTP ஐ உள்ளிடவும். அதன் பிறகு SBI ஆன்லைன் சேவை செயல்படுத்தப்படும்.

இந்த செயல்முறையின் மூலம், நீங்கள் ATM விவரங்கள் மூலமாகவும் SBI நெட் பேங்கிங்கில் பதிவு செய்யலாம். SBI இணைய வங்கி (Internet Banking) சேவை இயக்கப்பட்ட பிறகு, SBI வாடிக்கையாளர்கள் நிலுவை, பரிவர்த்தனை விவரங்கள், வங்கி கணக்கு அறிக்கை ஆகியவற்றை சரிபார்க்க முடியும். இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் (Online Transactions), எஃப்.டி மற்றும் ஆர்.டி ஆகியவை தொடர்பான பணிகளையும் ஆன்லைனில் செய்யலாம். இது தவிர, நீங்கள் வங்கிக்குச் செல்லாமலேயே காசோலை புத்தகத்தையும் ஆர்டர் செய்ய முடியும்.

ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News