SBI Vs HDFC Vs PNB: FD கணக்கிற்கு வட்டியை அள்ளித் தரும் வங்கி எது?

நிலையான வைப்புத்தொகையில் (FIXED DEPOSIT) முதலீடு செய்வது எப்போதும் முதலீட்டுக்கான பாதுகாப்பான விருப்பமாகும். கடந்த ஆண்டு முதல், வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, FD மீதான வட்டி அதிகரித்து, அதிக வருமானம் கொடுக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2023, 08:53 PM IST
  • பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகியவை FDக்கு அதிக வட்டியை வழங்குகின்றன.
  • HDFC வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான FD மீதான வட்டி விகிதங்கள் விபரம்.
  • பாரத ஸ்டேட் வங்கியின் FD மீதான வட்டி விகிதங்கள் விபரம்.
SBI Vs HDFC Vs PNB: FD கணக்கிற்கு வட்டியை அள்ளித் தரும் வங்கி எது? title=

நிலையான வைப்புத்தொகையில் (FIXED DEPOSIT) முதலீடு செய்வது எப்போதும் முதலீட்டுக்கான பாதுகாப்பான விருப்பமாகும். கடந்த ஆண்டு முதல், வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, FD மீதான வட்டி அதிகரித்து, அதிக வருமானம் கொடுக்கிறது. 2 கோடிக்கும் குறைவான எஃப்டியில் கிடைக்கும் வட்டியைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகியவை FDக்கு  அதிக வட்டியை வழங்குகின்றன. HDFC வங்கி FDக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. PNB FDக்கு ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது. எஸ்பிஐ ஆண்டுக்கு 7.50 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது.

HDFC வங்கியில் ரூ.2 கோடிக்கும் குறைவான FD மீதான வட்டி விகிதங்கள்

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

61 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

90 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்

9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்

1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 6.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்

15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் 5 ஆண்டுகளுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இரட்டை மகிழ்ச்சி: கணக்கில் வரும் கூடுதல் தொகை

பஞ்சாப் நேஷனல் வங்கி FD மீதான வட்டி விகிதங்கள் ரூ. 2 கோடிக்கும் குறைவானது

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்

271 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.30 சதவீதம்

1 ஆண்டு: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

1 வருடம் முதல் 443 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

444 நாட்கள்: பொது மக்களுக்கு - 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்

445 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்.

பாரத ஸ்டேட் வங்கியின் FD மீதான வட்டி விகிதங்கள்

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்

211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்: 2024-க்கு முன் பெரிய தொகை கணக்கில் வரும், இதுதான் காரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News