வியாழனன்று உயர்ந்த வெள்ளி: தங்கத்தை மிஞ்சி மின்னும் வெள்ளி

பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2020, 04:42 PM IST
  • தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்புவதால் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.
  • கொரோனா காலத்தில் விலையுயர்ந்த உலோகங்களுக்கான முதலீட்டு தேவை அதிகரித்துள்ளது.
  • தங்கத்தைக் காட்டிலும் வெள்ளியின் விலையில் உயர்வு காணப்படுகின்றது.
வியாழனன்று உயர்ந்த வெள்ளி: தங்கத்தை மிஞ்சி மின்னும் வெள்ளி title=

மும்பை: பொருளாதார மந்தநிலை (Economic slowdown) குறித்த அச்சங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கொரோனாவின் தீவிர பரவலுக்கு மத்தியில், தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்புவதால் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை, உள்நாட்டு சந்தையில் ஏழு ஆண்டுகளில் ஒரு புதிய உச்சத்தை வெள்ளி (Silver) தொட்டது. தொழில்துறை தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தை (Gold) விட வெள்ளியின் ஒளி அதிக பிரகாசமாகிவிட்டது.

மக்கள் தங்கத்தை விட வெள்ளியை அதிகமாக வாங்குகிறார்கள்

இந்த நேரத்தில் முதலீட்டாளர்களின் போக்கு தங்கத்தை விட வெள்ளியை நோக்கியே உள்ளது என்று புல்லியன் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் வெள்ளி விலை 2013 முதல் ஒரு கிலோவுக்கு ரூ.53,000 க்கு மேல் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 49,000 ரூபாய்க்கு மேல் உள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 19 டாலருக்கு மேல் உள்ளது. அதே நேரத்தில் தங்கம் அவுன்ஸ் 1800 டாலருக்கு மேல் உள்ளடு.

வெள்ளி விலை உயர்ந்ததற்கு காரணம் என்ன

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளுக்கு இடையிலான விகிதம் மீண்டும் குறைந்து வருவதாக பொருட்கள் சந்தை (Commodity Market) வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தங்கத்திற்கு பதிலாக முதலீட்டாளர்களின் கவனம் வெள்ளியை நோக்கி அதிகரித்துள்ளது என்பதற்கான அறிகுறியாகும். கொரோனா காலத்தில் விலையுயர்ந்த உலோகங்களுக்கான முதலீட்டு தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய உயர்வு வந்துள்ளது. இப்போது உலகெங்கிலும் லாக்டௌன் படிப்படியாக திறக்கப்படுவதால், தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் பழைய பாதைக்கு திரும்புகின்றன. இதனால் தங்கத்தைக் காட்டிலும் வெள்ளியின் விலையில் உயர்வு காணப்படுகின்றது.

ALSO READ: பச்சை வண்ணத்தில் பங்குச் சந்தை குறியீடுகள்: துவக்க நிலை வர்த்தகத்தில் ஏற்றம்!!

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) வெள்ளிக்கான செப்டம்பர் ஃப்யுசர்ஸ் ஒப்பந்தம் ஒரு கிலோவுக்கு 52877 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.  வியாழனன்று 53,199 ரூபாய் என்ற அளவும் எட்டப்பட்டது. இது செப்டம்பர் 2013 க்குப் பிறகு எட்டப்பட்டுள்ள மிக அதிக அளவாகும்.

அதே நேரத்தில், ஆகஸ்ட் ஒப்பந்தத்தின் முந்தைய அமர்வில் இருந்து ரூ .69 குறைந்து தங்கம் 10 கிராமுக்கு 49090 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது. இது 49245 ரூபாய் வரை சென்றது. MCX-ல் தங்கத்தின் விலை ஜூலை 8, 2020 அன்று 10 கிராமுக்கு ரூ .49348 ஆக உயர்ந்தது. இது சாதனை அளவாகும்.

Trending News