சென்னை: பெண்களின் மேல்முறையீட்டை பரிசீலிப்பதற்காக, துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருப்பதாக, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசுத்துறையில் ஆய்வுகளே தீர்வுகளை நோக்கி நகர்த்தும் என்கிற வகையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டார்.
முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த பெண்களில் சிலரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை, இது தொடர்பான புகார்கள் எழுந்ததை அடுத்து, ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்காதவர்கள் என, இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என தமிழக அரசு வாய்ப்பு வழங்கியிருந்தது.
மேல் முறையீட்டு மனுக்கள் பெறப்படும் காலக்கெடு முடிவடைந்ததும், அவை பரிசீலனை செய்யப்படும் இடங்களுக்கே சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டார்.
மேலும் படிக்க | இனி பாதி பேருக்கு 1000 ரூபாய் வராது... குண்டை தூக்கிப்போடும் குஷ்பு - காரணம் இதுதான்
கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோட்டை முதல் குமரி வரை சீரான வளர்ச்சியையும், எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவும் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அதன் நோக்கம் நிறைவேறிடும் வகையில், செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாகவும் அவர் பேசியிருந்தார்.
அரசுத்துறையில் ஆய்வுகளே தீர்வுகளை நோக்கி நகர்த்தும் என்கிற வகையில்,
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.கோட்டை முதல் குமரி வரை சீரான வளர்ச்சியையும் - எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவும் கழக அரசு செயல்படுத்தி வரும்… pic.twitter.com/esTdZ3T8KO
— Udhay (@Udhaystalin) October 28, 2023
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் லிஸ்டில் இருந்து பெயர் நீக்கம்! காரணம்?
மேலும், பெண்களின் மேல்முறையீட்டை பரிசீலிப்பதற்காக, துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருப்பதாக, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக, தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தார். பெறப்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்பங்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு போதுமான பயிற்சிகளை அதிகாரிகளுக்கு வழங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது, அந்த மையத்தில் இருந்தே சில பெண்களை அவர் தொடர்பு கொண்டு பேசினார்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு! போனில் பேசி தீர்வு காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ