ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் பிரீமியம் திட்டங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் தடை விதித்துள்ளது!!
ஏர்டெல் நிறுவனம் கடந்த வாரம் பிளாட்டினம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. மாதத்திற்கு சுமார் ரூ.499 அல்லது அதற்கு மேல் செலுத்தும் பிளாட்டினம் வாடிக்கையாளர்கள் 4G இணைய சேவையை அதிவேகத்தில் பெறுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. மற்றவர்களை விட பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
அதே போல் வோடபோன் ஐடியா நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் RedX Premium என்ற போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில், ரூ.999 செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% அதிவேக இணைய சேவை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ஏர்டெலின் பிளாட்டினம் மற்றம் வோடபோன் ஐடியாவின் RedX திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
REDA | JIO-க்கு இணையான ஏர்டெல்-ன் அதிரடி திட்டம்... பிரீமியம் ZEE5 சந்தா இலவசம்!!
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரீமியம் திட்டங்களால் அதில் சேராத வாடிக்கையாளர்களின் சேவை தரம் பாதிக்கப்படும் என்றும், இது விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாகவும் TRAI தெரிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் என்னென்ன சேவைகள் வழங்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் தெளிவான வரையறைகள் இல்லை எனவும் TRAI அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக பாரதிய ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நெட்வொர்க் மற்றும் சேவையை வழங்குவதில் ஆர்வமாக உள்ளதாக ஏர்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.