அமர்நாத் பனிலிங்க ஆரத்தியை வீட்டிலிருந்தே காணலாம்

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு தினசரி 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, அமர்நாத் பனிலிங்க ஆரத்தியை வீட்டிலிருந்தே காணலாம்

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jul 4, 2020, 11:21 PM IST
அமர்நாத் பனிலிங்க ஆரத்தியை வீட்டிலிருந்தே காணலாம்
File photo

ஸ்ரீநகர்: இந்த ஆண்டு சாலை வழியாக ஜம்முவில் இருந்து 500 யாத்ரீகர்களுக்கு மட்டுமே அமர்நாத் புனித யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் மனத்தாங்கலை போக்குவதற்காக தினசரி ஆரத்தியும், பூஜைகளும் தூர்தர்ஷன் தொலைகாட்சி சேனல் நேரலையில் ஒளிபரப்பும்.

ஜம்முவிலிருந்து 3,880 மீட்டர் உயரமுள்ள புனித குகைக் கோயிலுக்கு சாலை வழியாக ஒரு நாளைக்கு 500 யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா கிருமியின் பரவலை கருத்தில்க் கொண்டு இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் கலந்துக் கொள்பவர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன. கோவிட்-19 நோயானது காஷ்மீரிலும் தீவிரமாக பரவிவரும் நிலையில் வேறு வழி எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read | பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை பற்றிய அரிய தகவல்கள்

அதே நேரத்தில், நேரடியாக அமர்நாத் யாத்திரைக்கு ஜம்மு-காஷ்மீருக்கு வரும் பயணிகளுக்கு அனைத்துவிதமான பரிசோதனைகளும் கண்டிப்பாக செய்யபப்டும் என்று தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ஆர்த்தியின் தடையின்றி ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

முன்னதாக தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தலைமையில் அமர்நாத் யாத்திரை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கூட்டம் கூடி கலந்தாலோசித்து யாத்திரைக்கான திட்டங்களை வகுத்தது.

Also Read | J&K Kulgam: என்கவுண்டரில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்

அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டன. கோவிட் 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஜம்முவிலிருந்து தினமும் 500 பயணிகள் மட்டுமே சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

யாத்திரைக்காக பணியமர்த்தப்பட்டுள்ள மருத்துவர்கள்  மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய அளவு மருந்துகள், நுகர்வு பொருட்கள், sleeping bags மற்றும் முகக்கவசங்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

அமர்நாத்துக்கு Baltal வழியாக செல்லும் பாதையில் அடிப்படை வசதிகள் கொண்ட இரண்டு  மருத்துவமனைகளும் நிறுவப்படும் என்றும் அதிகாரிகள்  தெரிவித்தனர்.  COVID-19 தொடர்பான எந்தவொரு சவால்களையும் எதிர்க்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவான வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

Read Also | நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி, மூன்று பேர் காணவில்லை

பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் சரியாக செய்து முடிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தலைமையில் அமர்நாத் யாத்திரைக் குழுமுடிவெடுத்துள்ளது.

காஷ்மீர், கந்தர்பால் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களின் துணை ஆணையர்கள் மற்றும் எஸ்.எஸ்.பி.க்கள், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியம் (SASB) சம்பந்தப்பட்ட துறைகளின் பிற மூத்த செயற்பாட்டாளர்கள் என பலரும் வீடியோ மூலம் மாநாடு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.