ஹரியானாவில் நடைபெறவிருக்கும் 90 தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 1,168 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்!
அக்டோபர் 7-ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை 1,168 போட்டியாளர்கள் வேட்புமனு வேட்பாளர் ஓட்டத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இணை தலைமை தேர்தல் அதிகாரி இந்தர் ஜித் தெரிவிக்கையில்., "திங்களன்று வேட்பாளர்கள் வேட்புமனு வாபஸ் பெற்றதையடுத்து, ஹரியானாவில் 90 சட்டசபை இடங்களுக்கு மொத்தம் 1,168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் அடையாளங்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
மாவட்ட வாரியாக விவரங்களை அளித்த இணை தலைமை நிர்வாக அதிகாரி, அம்பாலா மாவட்டத்தில் 36 வேட்பாளர்கள், ஜஜ்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேர், கைதலில் இருந்து 57 பேர், சிர்சாவைச் சேர்ந்தவர்கள் 44 பேர், சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 66 பேர், ஹிசாரிலிருந்து 118 பேர் ஆகியோர் தேர்தல் களத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"இதேபோல், யமுனநகர் மாவட்டத்தில் 46 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மகேந்தர்கர் 45, சர்கி தாத்ரி 27, ரேவாரி 41, ஜிந்த் 63, பஞ்ச்குலா 24, ஃபதேஹாபாத் 50, ரோஹ்தக் 58, பானிபட் 40, மேவாட் 35, சோனிபட் 72" என்று இந்தர் ஜீத் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஃபரிதாபாத் மாவட்டத்தில் இருந்து 69 வேட்பாளர்கள், பிவானியைச் சேர்ந்த 71 பேர், கர்ணலைச் சேர்ந்தவர்கள் 59 பேர், குருகிராமிலிருந்து 54 பேர் மற்றும் பல்வாலில் இருந்து 35 பேர் போட்டியிட உள்ளனர்.
அக்டோபர் 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இந்த தேர்தலின் முடிவுகள், மூன்று நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.