மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் OPS, EPS பங்கேற்பு....

மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கின்றனர்!!

Updated: May 27, 2019, 10:49 AM IST
மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் OPS, EPS பங்கேற்பு....

மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கின்றனர்!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதில், பா.ஜ.க. மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து, பிரதமாக நரேந்திர மோடி NDA தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து குடியரசு தலைவரும் ஆட்சியமைக்க வருமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக 30 -ஆம் தேதி காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் டெல்லி செல்லவுள்ளனர். பதவியேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். மேலும், இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள்.