ராகுல் காந்தி ராஜினாமா அறிவிப்பு; கட்சி நிர்வாகிகள் ஏற்க மறுப்பு

ராகுல் காந்தியே தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனக்கூறி ராகுல்காந்தியின் ராஜினாமாவை நிராகரித்து காங்கிரஸ் செயற்குழு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2019, 01:04 PM IST
ராகுல் காந்தி ராஜினாமா அறிவிப்பு; கட்சி நிர்வாகிகள் ஏற்க மறுப்பு title=

டெல்லி: நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கின்றது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பு ஏற்று உத்திர பிரதேச மாநில தலைவர் ராஜ் பாபர் தனது பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேப்போல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கண்ட வீழ்ச்சிக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் மூத்த தலைவர் HK பாட்டில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு பெறுப்பு ஏற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நிரன்ஜன் பட்நாயிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இப்படி காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாநில தலைவர்கள் தங்கள் பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து வரும் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்க்கான கடிதத்தை ராகுல் காந்தி அளித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், ராகுல் காந்தியே தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கூறி ராகுல்காந்தியின் ராஜினாமாவை நிராகரித்துவிட்டனர் எனக் தகவல்கள் கூறுகின்றன.

Trending News