ராஜ்யசபா எதிர்வரும் நிலையில் காங்கிரஸ் MLA-க்கள் இருவர் மாயம்...?

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்து வரும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், குஜராத் காங்கிரஸின் இரண்டு எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை (மார்ச் 14) முதல் தொடர்பற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 15, 2020, 11:37 AM IST
ராஜ்யசபா எதிர்வரும் நிலையில் காங்கிரஸ் MLA-க்கள் இருவர் மாயம்...? title=

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்து வரும் மத்தியப் பிரதேசத்தில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், குஜராத் காங்கிரஸின் இரண்டு எம்.எல்.ஏக்கள் சனிக்கிழமை (மார்ச் 14) முதல் தொடர்பற்ற நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'காணாமல் போன' இரண்டு எம்.எல்.ஏக்கள் லிமி தொகுதியைச் சேர்ந்த சோமா படேல் மற்றும் தாரி தொகுதியைச் சேர்ந்த ஜி வி ககாடியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் சனிக்கிழமை மாலை முதல் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோலி படேல் வேட்பாளருக்கு காங்கிரஸ் ராஜ்யசபா டிக்கெட் வழங்க வேண்டும் என்று விரும்பியதால் சோமா படேல் கட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளார் என்று அறியப்படுகிறது, ஆனால் கட்சி அவரது கோரிக்கையை கவனிக்க மறுத்து சக்திசிங் கோஹில் மற்றும் பாரத்சிங் சோலங்கி ஆகியோரை காங்கிரஸின் ராஜ்யசபா வேட்பாளராக பரிந்துரைத்தது. 

மார்ச் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்த இரு எம்.எல்.ஏக்களும் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது இந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களும் மாயமாகியுள்ளனர்.

மேலும், மாநிலங்களவை தேர்தலின் போது ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கட்சி தனது எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஜெய்ப்பூருக்கு மாற்றியதற்கு இதுவே காரணம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், 73 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 15 பேர் ஏற்கனவே ஜெய்ப்பூரை அடைந்துள்ளனர், மேலும் சில எம்.எல்.ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூருக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் இரண்டு இடங்களை வெல்ல காங்கிரசுக்கு 74 வாக்குகள் தேவைப்படும், கட்சிக்கு ஏற்கனவே சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியின் ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களின் வாக்குகள் காங்கிரஸுக்கு சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது.

Trending News