AMMK-க்கு தனி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது - TTV!

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தும், அமமுகவுக்கு தனி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என டிடிவி தினகரன் அதிருப்தி!!

Last Updated : Dec 11, 2019, 12:31 PM IST
AMMK-க்கு தனி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது - TTV! title=

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தும், அமமுகவுக்கு தனி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என டிடிவி தினகரன் அதிருப்தி!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்கிறது.. வாக்கு எண்ணிக்கை  வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.  வரும் 16 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19 ஆம் தேதி கடைசி நாளாகும். வரும் 27 மற்றும் 30 ஆம தேதிகளில்  இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜனவரி 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்த்ருந்தது. இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். 

இதை தொடர்ந்து, அமமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்..... தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார் என்று கூறினார். ஆனால், தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். இதனால், அமமுக அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

 

Trending News