பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கமாட்டார் என தகவல்!!
அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது. நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி, மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில முதல்வருமான பினராயி விஜயன், நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார் என, முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், பிரதமர் நரேந்திர மாேடியின் பதவியேற்பு நிகழ்ச்சியை பினராயி விஜயன் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Kerala CMO: Chief Minister Pinarayi Vijayan will not attend Prime Minister Narendra Modi's oath taking ceremony on May 30th. (File pics) pic.twitter.com/nVrsY2LB1i
— ANI (@ANI) May 29, 2019
இதற்க்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் பதவி பதவியேற்பு விழாவில் பங்கேற்கபோவதில்லை என மமதா பானர்ஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.