கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனங்கள் விபத்தில் சிக்கின.
சபரிமலை கோவிலுக்குள் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய முடியாது என்ற நிலைமை மாற்றி, கடந்த ஜனவரி 2-ஆம் நாள் கனக துர்கா(39), பிந்து அமினி (40) ஆகிய இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்தனர்.
நேற்று முன் தினம் காவல்துறை உதவியுடன் சபரிமலை கோவிலுக்குள் கனகதுர்கா(44), பிந்து(42) ஆகியோர் சென்றதை அடுத்து தற்போது இலங்கையை சேர்ந்த சசிகலா(47) சபரிமலை கோவில் சென்றுள்ளார்!
மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
கேரள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல் அமைச்சர் பிரனாயி விஜயன் அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல் ஹாசான் தனது டிவிட்டரில் கேரள முதல்வர் பிரனாயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் பிரனாயி விஜயனின் நடவடிக்கை மூலம் பெரியாரின் கனவு நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமலின் டிவிட்:-
கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ்., செய்தித்தொடரபாளர் சந்திரவத் திமிராக பேசியுள்ளார்.
கேரளாவின் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் போராட்டம் நடக்கிறது. அதில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் சந்திரவத் கூறியதாவது:-
கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக திமிராக பேசியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய வருகிறது. ஆனாலும் சந்திரவத், இதை நாட்டு நன்மைகாக தெரிவித்தேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.