சிவசேனா தான் தனது பாதையை தீர்மானிக்க வேண்டும் -பவார்...

பாஜக-வும் சிவசேனாவும் ஒன்று சேர்ந்து போராடினர், இருவருக்கும் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என NCP தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 18, 2019, 02:37 PM IST
சிவசேனா தான் தனது பாதையை தீர்மானிக்க வேண்டும் -பவார்... title=

பாஜக-வும் சிவசேனாவும் ஒன்று சேர்ந்து போராடினர், இருவருக்கும் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என NCP தலைவர் ஷரத் பவார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பிற்கு முன்னர் செய்தியாளர்களிடன் பேசிய தேசியவாச காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார்., "பாஜகவும் சிவசேனாவும் ஒன்றாகப் போராடினர், அவர்கள் சாத்தியமான கூட்டணியில் தங்கள் பாதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் பேசிய பவார், "பாஜக-சிவசேனா ஒன்றாகப் போராடியது, நாங்கள் (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மற்றும் காங்கிரஸ் தேர்தல்களில் ஒன்றாகப் போராடினோம். அவர்கள் தங்கள் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும், நாங்கள் எங்கள் அரசியலைச் செய்வோம்" என தெரிவித்துள்ளார். பவாரின் இந்த சூசக பதில்கள் சிவசேனாவை ஒதுக்கி வைப்பது போல் தெரிகிறது.

எவ்வாறாயினும், சோனியா காந்தியை பிற்பகுதியில் அவரது இல்லத்தில் தான் சந்திக்க இருப்பதாவும் பவார் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பினை அடுத்து ஒரு உறுதியான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் வட்டாரங்களின்படி, கூட்டத்தில், இரு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது, அரசியல் ரீதியாக மோசமான நிலையில் இருக்கும் மகாராஷ்டிராவில் கடந்த செவ்வாயன்று ஜனாதிபதியின் ஆட்சி விதிக்கப்பட்டது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ளனர்.

இதனிடைய வாக்கெடுப்புக்கு முந்தைய கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அரசாங்க அமைப்பிற்காக சிவசேனாவுடன் பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் (CMP) செயல்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிக்கு ஆம் என்று சொல்வதற்கு முன்பு, சிவசேனா தனது கடினமான இந்துத்துவ சித்தாந்தத்தை சிந்தித்து பல விஷயங்களில் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கட்சி விரும்புகிறது எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு முந்தைய நட்பு கட்சிகளா பாஜக-வும், சிவசேனாவும் அக்டோபர் 21 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. 288 இடங்களில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றது. இருப்பினும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சுழற்சி முதலமைச்சர் பதவியைக் கோரியதைத் தொடர்ந்து கூட்டணி பிரிந்தது.  மறுபுறம், மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி முறையே 44 மற்றும் 54 இடங்களை வென்றன. என்ற போதிலும் அரசாங்கத்தை அமைக்க உறுதியான கூட்டணி அமைக்கப்படாத நிலையில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது.

Trending News