அதிகளவு சர்க்கரை உண்பதால் புற்றுநோய் ஏற்படுமா?

குறைவான உடலுழைப்பு மற்றும் அதிகளவிலான சர்க்கரையை உண்பதால் உடல் பருமன் ஏற்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2022, 04:17 PM IST
  • சர்க்கரை உடல் பருமனை அதிகரிக்கும்.
  • சில நிபுணர்கள் சர்க்கரை, புற்றுநோயை உருவாக்கும் என்று நம்புகிறார்கள்.
  • புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைய சர்க்கரை க்ளுகோஸ் தேவைப்படுகிறது.
அதிகளவு சர்க்கரை உண்பதால் புற்றுநோய் ஏற்படுமா?  title=

அதிகளவில் உண்ணும் பொருட்கள் எதுவும் உடலுக்கு நல்லதை செய்யாது, அதேபோல தான் சர்க்கரையும், அதிகப்படியான சர்க்கரை உண்பதால் நீரிழிவு நோய் ஏற்படுவதோடு எலும்புகளுக்கும் கேடு உண்டாகும். குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் இயக்குநர் டாக்டர் வேதாந்த் கப்ராவின் கூறுகையில், அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி மற்றும் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள், சர்க்கரை புற்றுநோயை உருவாக்கும் என்று கூறவில்லை, ஆனால் அவை உடல் பருமனை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

sugar

மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

இருப்பினும் சில புற்றுநோய் நிபுணர்கள் சர்க்கரை புற்றுநோயை உருவாக்கும் என்று நம்புகிறார்கள்.  அதிகப்படியான சர்க்கரை உடல் பருமனை ஏற்படுத்துகிறது, இதன் விளைவால் உடலில் புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறுகின்றனர்.  கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இயற்கையான உணவைப் பொறுத்து சர்க்கரையின் அவசியம் உள்ளது என போர்டிஸ் மருத்துவமனை ஷாலிமார் பேக், மெடிக்கல் ஆன்காலஜியின் இயக்குநர் டாக்டர் மோஹித் அகர்வால் கூறியுள்ளார்.  மேலும் ஒருவர் எவ்வளவு சர்க்கரை சாப்பிடலாம் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது.  ஒவ்வொருவரின் உடல் எடை மற்றும் உயரம் இவற்றை கணக்கில் கொண்டுதான் ஒருவரது உடலுக்கு தேவைப்படக்கூடிய சர்க்கரையின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.  

sugar

சர்க்கரையை அதிகப்படியாக சேர்த்தல் எவ்வாறு புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதை பற்றி டாக்டர் அகர்வால் விளக்குகிறார், புற்றுநோய் செல்கள் மிக வேகமாக வளர்ச்சியடைய அதற்கு நிறைய சர்க்கரை க்ளுகோஸ் தேவைப்படுகிறது.  அதனால் அதிகப்படியான சர்க்கரை செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதால் இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.  இருப்பினும் சர்க்கரை உண்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை, ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட, அவர்கள் சர்க்கரையை உண்ணலாம் அதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. 

எப்படியிருந்தாலும் அதிகப்படியான சர்க்கரையை சாப்பிட்டால் நிச்சயம் இந்த இரண்டு உடல் உபாதைகள் ஏற்படும்.  ஒன்று நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு, உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது.  மற்றொன்று அதிகப்படியான சர்க்கரை மற்றும் குறைவான உடலுழைப்பில் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டு அதன் மூலம் பல்வேறு தீங்குகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News