தண்ணீர் நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். உணவில்லாமல் நீண்ட நேரம் இருப்பவரால் கூட நீரில்லாமல் இருக்க முடியாது. நம் உடலில் போதிய அளவில் நீர்சத்து இருப்பது நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. வெறும் நீரை அருந்துவதை விட, வெதுவெதுப்பான அல்லது உங்களால் பொறுத்துக்கொள்ளக்கூடிய அளவில் சுடுநீரை அருந்துவது மிக நல்லது. வெந்நீரின் ஆரோக்கிய நன்மைகளை இங்கே காணலாம்.
1. எடை இழப்பு
இன்றைய உலகில் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஃபிட்டாகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்கு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அதிகாலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை (Water) அருந்தினால், அது நம் உடலில் வெப்பநிலையை அதிகரிக்கும். இதன் விளைவாக நமது உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும். நீரில் சுவையை சேர்க்க விடும்பினால், அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்க்கலாம். எலுமிச்சை சாறு, உடலில் தேங்கியுள்ள அமிலத்தன்மை மற்றும் நச்சுகளுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் உடலில் எடை குறையும்.
2. சிறந்த இரத்த ஓட்டம்
நாள் முழுவதும் நாம் சாப்பிடும் உணவால், நம் உடலில் கொழுப்பு மற்றும் நச்சுப் படிவுகள் உண்டாகின்றன. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் சிறுநீரக நச்சுகள் மற்றும் குடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் சிறுநீர் பகுதி வழியாக அகற்றப்படுகின்றன. இது நமது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
3. நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் செரிமானம் பலம் பெறும்
அதிகப்படியான உணவு காரணமாக பலர் செரிமான (Digestion) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உணவுக்கு முன்னும் பின்னும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உணவு சிறு துண்டுகளாக உடைக்கப்படுகின்றது. இது உங்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. சூடான நீரில் எந்த கலோரியும் இல்லை. ஊனவு சாப்பிட்ட உடனேயே வெதுவெதுப்பான நீரை குடிப்பதும் தவறு. சிறிது இடைவெளி விட்டு நீரை அருந்த வேண்டும். உடனே அருந்தினால், செரிமான சக்தி குறைந்து எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ALSO READ: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
4. மூக்கடைப்பு மற்றும் தொண்டை பிரச்சனைகள் தீரும்
அதிகப்படியான மாசு காரணமாக பலருக்கு இந்த பிரச்சனைகள் வருகின்றன. இரவில் தேனுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், அரிப்பு மற்றும் தொண்டை புண் வராமல் தடுக்கலாம். இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைப் போட்டு கொப்பளிக்கலாம், தொண்டையில் வைத்து கார்குல் செய்யலாம். இது நமது சுவாச அமைப்பிலிருந்து கபத்தை அழிக்கிறது. எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் மூக்கடைப்பில் இருந்து விடுபடுவீர்கள். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளதால் இது வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
5. கூந்தல் பிரச்சனைக்குத் தீர்வு
இன்றைய தலைமுறையில் அனைவரும் கூந்தல் பராமரிப்பில் (Hair Care) அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் முடி வேர்களின் நரம்புகள் துடிதுடிப்புடன் இயங்கும். இதனால், இரத்த ஓட்டம் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் மாறும். இது நம் முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. சூடான நீர் நீரிழப்பு, பொடுகு ஆகியவற்றை தடுப்பதோடு உச்சந்தலை வறண்டு போகாமல் தடுக்கிறது.
6. இளவயது முதுமையை தடுக்கிறது
பல தோல் பிரச்சினைகள் செரிமானத்தால் ஏற்படுகின்றன. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் நமது செரிமானம் இயல்பாகி, சரும செல்களை சரிசெய்கிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இது முகப்பரு, தோல் சுருக்கம் மற்றும் இது தொடர்பான பிற பிரச்சனைகளையும் தடுக்கிறது. வெளியே மேக் அப் செய்து வயதை குறைப்பதை விட, உள்ளிருந்து ஆரோக்கியமாக இருப்பதுதான் நல்லது.
7. மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு நிவாரணம்
நம்மில் பலர் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இது பரம்பரை அல்லது உணவுப் பழக்கம் காரணமாகவும் ஏற்படலாம். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உடலில் நீரின் அளவு குறைவாக இருப்பதால்தான் பெரும்பாலான வயிற்றின் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வெறும் வயிற்றில் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் குடலின் இயக்கம் அதிகரிக்கும். இதனால் உணவு எந்த வித தடையும் இல்லாமல் குடல் வழியாக எளிதில் செல்லும்.
நம் உடலுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 2.5 முதல் 3.0 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அவற்றில், பாதி சிறுநீரகத்தாலும் மீதி தோல், நுரையீரல் மற்றும் குடலாலும் உறிஞ்சப்படுகின்றன.
ALSO READ: கோடையை கூலாக கழிக்க நீர் மோர், உடல் பிரச்சனைகள் no more!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR