Coronavirus ஜுலைக்குள் ஒழிய வேண்டுமா? இது மட்டும் நடந்தால் போதும்…

தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை ஜூலை மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் என்றும் அவர் சொல்கிறார்… அவர் சொல்லும் நிபந்தனை என்ன தெரியுமா?   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2020, 04:01 PM IST
  • Coronavirus ஜுலைக்குள் ஒழிந்துவிடும் என்று அமெரிக்க நிபுணர் கருத்து
  • இதே கருத்தை பில் கேட்சும் முன்பு கூறியிருந்தார்
  • உலகில் நபருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி என்றால் 10 பில்லியன் டோஸ் தடுப்பூசி தேவை
Coronavirus ஜுலைக்குள் ஒழிய வேண்டுமா? இது மட்டும் நடந்தால் போதும்… title=

End of Coronavirus pandemic: தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸை ஜூலை மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறுகிறார். அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான் என்றும் அவர் சொல்கிறார்… அவர் சொல்லும் நிபந்தனை என்ன தெரியுமா?   

உலகில் கொரோனா (Coronavirus) நோயாளிகளின் எண்ணிக்கை எட்டரைக் கோடியைத் தாண்டியுள்ளது. 5 கோடியே 88 லட்சம் பேர் நோயில் இருந்து குணமாகியுள்ளனர். 18 லட்சத்து 10 ஆயிரத்திற்குக்ம் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவின் (Coronavirus) அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதோடு, அது புது அவதாரத்தையும் எடுத்துவிட்டது. இருப்பினும், விரைவில் கொரோனாவை உலகம் முழுவதிலுமிருந்து ஒழித்துக் கட்டிவிட முடியும். இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. தடுப்பூசி வந்துவிட்டது. பல நாடுகளில் தடுப்பு மருந்துக்கு அவசரகால அடிப்படையில் ஒப்புதல்களும் கொடுக்கப்பட்டுவிட்டது.

Also Read | கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்... SMS மூலம் தகவல் அளிக்கும் திட்டம்..!!!

பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கிவிட்டது. அடுத்த மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிடும். இந்த நிலையில் இப்போது மற்றுமொரு ஆறுதலான செய்தி வந்துள்ளது. கொரோனாவை முற்றிலும் ஒழித்துக் கட்டிவிட முடியும் என்று அமெரிக்க நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உலகில் தடுப்பூசி பணிகள் முறையாக செய்யப்பட்டால், 2021 ஜூலை மாதத்திற்குள் கொரோனா வைரஸை (Coronavirus) அழிக்க முடியும் என்று அமெரிக்காவின் வைரஸ் நோய் நிபுணர் மருத்துவர் அந்தோனி ஃபாசி (Scientist) கூறியுள்ளார். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்பதையும் அவர் அடிக்கோடிட்டுச் சொல்கிறார். அது என்ன தெரியுமா?

தடுப்பூசி (Vaccination) போடும் செயல்முறையை ஒரு முறையில் முடிக்க வேண்டும். அதே நேரத்தில், தடுப்பூசி 70 சதவீத மக்களுக்கு போடப்பட வேண்டும். இது மட்டும் சரியாக நடந்தால் உலகில் இருந்து கொரோனாவுக்கு விடை கொடுத்துவிட  முடியும். உலகம் 2019க்கு முன்பு இருந்தது போல இயல்பானதாகிவிடும். மக்களின் இயக்கமும் பழைய நிலைக்கு மாறிவிடும்.  

Also Read | COVID-19: இந்தியாவில் பல மாதங்களுக்கு பிறகு மிகக்குறைந்த அளவில் தொற்று பாதிப்பு

தடுப்பூசி மிகவும் முக்கியமானது

அமெரிக்க நிபுணர் மற்றும் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தின் கொரோனா பணிக்குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர் ஃபாசி, கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசனுக்கு அளித்த பேட்டியில் இதைக் கூறியுள்ளார். ஃபாசியின் கூற்றுப்படி, கொரோனா அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தடுப்பூசி தொடர்ச்சியாக கொடுக்கப்பட வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் முறையாக தடுப்பூசி (Vaccination) போடுவதால் மட்டுமே கொரோனாவை வேரோடு அழிக்க முடியும். 

இது உறுதி செய்யப்பட்டால், 2021 ஜூலை மாதத்திற்குள் விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஏப்ரல் 2021 க்குள், அமெரிக்காவும் (America) உலகின் பல நாடுகளும் பெரிய அளவில் தடுப்பூசி போட ஆரம்பித்திருக்கும். அதன் விளைவும் காணப்படும் என்று ஃபாசி கூறினார். அதோடு, 2021 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்கள் அமெரிக்காவிற்கு (America) மட்டுமல்ல, முழு உலகிற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Also Read | Santa Claus கொடுத்த கொரோனா பரிசால் 18 பேர் பலி, 157 பேருக்கு Covid-19

ஜூலை முதல் உலகம் முன்பைப் போல செயல்படலாம்

மக்கள் தடுப்பூசி செயல்முறைக்கு உதவுவதோடு, சரியான நேரத்தில் தடுப்பூசி (Vaccination) போடவும் வேண்டும். அப்படி செய்தால், ஜூலை மாதத்திற்குள், பள்ளிகள், தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் உணவகங்கள் ஏற்கனவே இருந்த சூழ்நிலைக்கு மாறிவிடும் என்று  மருத்துவர் ஃபாசி கூறினார். எனவே தடுப்பூசியை முடிந்த அளவு விரைவில் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது பேட்டி மூலம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

70 சதவீத மக்கள் தடுப்பூசி போட வேண்டும்

டாக்டர் ஃபாசி இந்த கருத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, அமெரிக்க வணிக அதிபர் பில் கேட்ஸும் (Bill Gates) கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், உலக மக்கள் தொகையில் 70 சதவீததினருக்கு தடுப்பூசி போட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்ததும் குறிபிடத்தக்கது.  

Also Read | Shocking: இந்த வாரம் COVID Vaccine, அடுத்த வாரம் Corona Positive: US-ல் பரபரப்பு

ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி என்ற அடிப்படையில் 10 பில்லியன் டோஸ் தேவைப்படும். அந்த அளவு தடுப்பூசிகளை (Vaccination) விரைவில் தயாரிப்பது என்பதும் எளிதானது அல்ல. உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து வெவ்வேறு நோய்களுக்காக உருவாக்கும் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் ஆறு பில்லியன் டோஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR  

Trending News