மூட்டு வலி நோயாளிகளுக்கான பழங்கள்: இன்றைய வாழ்க்கை முறையில், மூட்டு வலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இப்போது 30 வயதைத் தாண்டியவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதைச் சமாளிக்க உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இந்த பிரச்சனை அதிகரித்து, நம் அன்றாட வாழ்க்கையெயே பாதிக்கும் நிலைக்கு சென்று விடும்.
அதைச் சமாளிக்க சிலர் சகல விதமான மருந்துகளை உட்கொள்வதோடு, ஒவ்வொருவர் கூறும் அனைத்து அறிவுரைகளையும் டிப்ஸ்களையும் பின்பற்றுகிறார்கள். ஆனாலும், வலி குறையவில்லை என்றால், உங்கள் உணவில் இதுபோன்ற மூன்று பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், இது உங்களுக்கு விரைவில் நிவாரணம் தரும். எனவே உங்கள் வலியைக் குறைத்து நிம்மதி அளிக்கும். அத்தகைய மூன்று பழங்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைச் சாப்பிட்டால் தண்ணீர் சத்து பற்றாக்குறை பூர்த்தியாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது. ஆனால், இது மூட்டு வலியை போக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இது வலியை போக்கும் அரு மருந்தாக செயல்பட்டு, உங்களுக்கு நிம்மதி அளிக்கும்.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
2. திராட்சை
திராட்சையை உட்கொள்வதன் மூலம், நீங்கள் பல வகையான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இதனை உட்கொள்வதால் மூட்டு வலிக்கும் நிவாரணம் கிடைக்கும். அதாவது, திராட்சை சாப்பிடாதவர்கள், இந்தப் பழத்தை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. தினமும் தர்பூசணி சாப்பிடுங்கள்
இது கோடை காலம். தர்பூசணி இந்த காலத்தில் தான் உண்ணப்படுகின்றன. இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. உடனடி ஆற்றல் கிடைக்கும். இந்த பழத்தை சாப்பிடாதவர்கள் அல்லது மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள் இதை தங்கள் உணவில் இன்றே சேர்க்க வேண்டும். இது மூட்டு வலியை போக்கும் வலி நிவாரணமாக செயல்படும்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR