நீரிழிவு நோயிலிருந்து விடுபட முடியுமா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் இருந்துவந்த நிலையில், தற்போதைய ஆராய்சி முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
நீரிழிவில் இருந்து நிரந்தரமாக விடுபட முடியும் என்ற சமீபத்திய ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆயுர்வேத மருந்து BGR-34 மூன்று மாதங்களுக்குள்சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்றும், நீரிழிவு சிக்கல்களைத் தடுக்க ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற நடவடிக்கையை கொடுக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் சுரைக்காய்
செர்பிய ஜர்னல் ஆஃப் எக்ஸ்பெரிமெண்டல் அண்ட் கிளினிக்கல் ரிசர்ச் ஆன் சைண்டோ சயின்டிகல் பிளாட்ஃபார்மின் (Serbian Journal of Experimental and Clinical Research on Sciendo scientific platform) சமீபத்திய பதிப்பில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
ஆயுர்வேத மருந்து BGR-34 செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் மலிவு விலையில் நல்ல விளைவுகளைக் கொடுப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
BGR-34 வழங்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு கிளைகிலேட்டட் ஹீமோகுளோபின் (HbA1c) அளவு, நான்காவது வாரத்தில் 8.499 சதவீதத்திலிருந்து 8.061 சதவீதமாகவும், எட்டாவது வாரத்தில் 6.56 சதவீதமாகவும், 6.27 சதவீதமாகவும் கணிசமாகக் குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் படிக்க | சைவ உணவு உண்பவர்களுக்கு நல்ல செய்தி! உங்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவு
இதேபோல், மூலிகை மருந்தை உட்கொள்வதற்கு முன்பு, சராசரியாக 250mg/dl ஆக இருந்த சர்க்கரையின் அளவு 12வது வாரத்தில் 114mg/dl ஆகக் குறைந்து, அதே நேரத்தில் FBS 176ல் இருந்து 74 ஆகக் குறைந்தது என்பது RBS சோதனையில் தெரியவந்துள்ளது.
ஆய்வு முடிவைப் பற்றி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த, ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளர்,"இந்த முடிவுகளின் அடிப்படையில், பிஜிஆர் -34 உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் கிளைசெமிக் அளவைக் குறைப்பதில் அதிக சக்தி வாய்ந்தது மற்றும் திறமையானது என்று முடிவு செய்யலாம். இன்சுலின் வெளியீட்டை மாற்றியமைத்தல் மற்றும் செல் செயல்பாட்டு திறனை வலுப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
பல்வேறு மூலிகைகள் இருப்பதே, சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்கு நன்கு அறியப்பட்ட வேறு சில மருத்துவ தாவரங்களில் உள்ள பைட்டோ-கன்ஸ்டிட்யூட்கள் நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு உதவுகின்றன.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பருப்புகள்
மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR