பாதாமில் உள்ள நன்மைகள்...

Last Updated : Sep 25, 2017, 05:23 PM IST
பாதாமில் உள்ள நன்மைகள்... title=

பாதாமில் உள்ள நன்மைகள் என்னென்ன... 

பாதாமில் அதிகளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதால், உடல் எடை அதிகமாகிறது. உடல் பருமன் அடைய நினைப்பவர்களுக்கு பாதாம் பருப்பு சாப்பிடுவது மிக சிறந்தது. பாதாம் பருப்பை சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்கள் நமக்கு கிடைக்கும். உடல் சக்தியை பெறுவதற்கு எல்லா விதமான பானங்களிலும், உணவுப்பொருள்களிலும் சேர்த்து சாப்பிடலாம்.

பாதாம் மிகவும் ஊட்டச்சத்துக் கொட்டை மற்றும் வைட்டமின் E, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஆதாரமாக உள்ளது. இது துத்தநாகம், செலினியம், தாமிரம் மற்றும் நியாசின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அனைத்து மற்ற கொட்டைகள் ஒப்பிடும்போது, ​ஊட்டச்சத்து அதிகம் நிறைந்தது.
 
பாதாம் அதிகம் ஈரான், சவுதி அரேபியா, லெபனான், துருக்கி, சிரியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் போன்ற இடங்களில் பாதாம் காணப்படுகிறது

பாதாம் பருப்பில் உள்ள நன்மைகள் : 
# பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ உள்ளன.
# உடல் பருமன் அடைய நினைப்பவர்களுக்கு பாதாம்.
# பாதாமில்  கொழுப்பு, கலோரிகள்,அதிகம் உள்ளன.  
# உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
# வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் குணம் உடையது.
# வயிற்ற எரிச்சல் ஏற்படும் போது பாதாம் பால் அருந்துவது நல்லது.
# ஆண்மை குறைப்பாடுகளை நீக்க பாதாம் உதவுகிறது.
# பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம்,பாஸ்பரஸ் உள்ளன.
# குழந்தைகளுக்கு தினமும் காலை,மாலை நேரங்களில் பாதாம் பருப்பு வெறுமான சாப்பிடுவது நல்லது.
# புற்றுநோய் வருவதை தடுக்கும்.
# பாதாம் பருப்புகள் மனித மூளையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும்.

Trending News