யூரிக் ஆசிட் நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான வீட்டு வைத்தியங்கள்

Uric Acid Tips: காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் யூரிக் அமில பிரச்சனையில், மறந்து கூட இந்த 3 காய்கறிகளை சாப்பிடக்கூடாது

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2024, 05:17 PM IST
  • யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • சில உணவுகளில் இந்த பியூரின் அதிகளவு காணப்படுகிறது.
  • இந்த காய்கறிகளை சாப்பிட வேண்டாம்.
யூரிக் ஆசிட் நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான வீட்டு வைத்தியங்கள் title=

Vegetables To Avoid in High Uric Acid: அதிக யூரிக் அமிலம் பியூரின் எனப்படும் புரதத்திலிருந்து உடலில் உருவாகிறது. சில உணவுகளில் இந்த பியூரின் அதிகளவு காணப்படுகிறது மற்றும் இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். அதிக யூரிக் அமிலம் உடலில் உற்பத்தியாகும் கழிவுப் பொருள். உடலில் அதன் அளவு அதிகரித்தால், மூட்டு வலி, விரல்கள் மற்றும் எலும்புகளில் வீக்கம் உள்ளிட்ட பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படும். எனினும் இந்த யூரிக் அமிலம் பொதுவாக சிறுநீர் மூலம் வடிகட்டப்படுகிறது. ஆனால் ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை மற்றும் வேறு சில உடல்நலக் காரணங்களால் அதன் அளவு உடலில் அதிகரிக்கத் தொடங்கும். இதனால் இரத்தத்தில் இந்த யூரிக் அமிலம் சேரத் தொடங்கும். மேலும் இந்த யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே நீங்கள் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், மறந்து கூட இந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டாம். அவை என்னென்ன காய்கறிகள் என்பதை பார்போம்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த காய்கறிகளை சாப்பிட வேண்டாம்- (Do not eat these vegetables if you have high uric acid):

1. ப்ரோக்கோலி: ப்ரோக்கோலி ஒரு பச்சை காய்கறி ஆகும், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் அதிக யூரிக் அமிலம் இருந்தால் ப்ரோக்கோலியை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த காய்கறியில் அதிக அளவு பியூரின் மற்றும் அதிக யூரிக் அமிலம் இருப்பதால், ப்ரோக்கோலியை அதிகமாக உட்கொள்வது வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | Fruits For Belly Fat : இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!

2. காளான்: பெரும்பாலானோர் காளான் சாப்பிடுவதை விரும்புவார்கள். காளானில் இருந்து பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். ஆனால் காளானை உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? காளானில் அதிக அளவு பியூரின் நிறைந்துள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால், யூரிக் அமிலம் அதிகரித்து உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடலாம்.

3. கீரை: உங்களுக்கு அதிக யூரிக் அமில பிரச்சனை இருந்தால் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் கீரை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Dry Fruits For Muscle Strength: தொள தொள தசையை கல் போல வலிமையாக்க..‘இதை’ சாப்பிடலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News