Summer Drinks For Weight Loss: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சயாக உள்ளது. அதுவும் தொப்பையில் கொழுப்பு சேர்ந்துவிட்டால் அதை அகற்றுவது மிக கடினமான பணியாகிவிட்டது. தொப்பை கொழுப்பாக இருந்தாலும் சரி, உடல் பருமனாக இருந்தாலும் சரி, அனைவரும் இவற்றிலிருந்து நிவாரணம் காண விரும்புகிறார்கள்.
தொப்பை கொழுப்பு
உடல் பருமனால் தொல்லையா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை. இன்றைய உலகில் உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றுக்கு மத்தியில் சில அடிப்படை விஷயங்களை மறந்து விடுகிறார்கள். உடல் எடையை குறைக்க நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படக்கூடாது.
உடல் பருமனில் இருந்து விடுபட, உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் பருமனை தடுத்து உடல் எடையை குறைக்கும் (Weight Loss) உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். தொப்பை கொழுப்பைக் (Belly Fat) குறைக்க இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வழியாக பார்க்கப்படுகின்றது. கோடை காலத்தில், பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் வடிவத்தை பராமரிக்க தங்கள் உணவு முறையில் மாற்றம் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் அதிக சிரமம் எடுக்காமலும் உடல் எடையை குறைக்கலாம். சில சுவையான பானங்களை உட்கொண்டு கொழுப்பை எளிதாக எரிக்க முடியும். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை விரைவாக குறைக்கும் அந்த அதிசய பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இளநீர் (Tender Coconut)
இளநீரில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கோடை காலத்தில் இளநீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை குறைப்பதில் உதவி கிடைக்கின்றது. இளநீர் சருமத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. குறிப்பாக உடல் நிலை உஷ்ணமாக உள்ளவர்களுக்கு இளநீர் மிக நல்லது.
மேலும் படிக்க | மதியம் சாப்பிட பிறகு செய்யக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்!
வெள்ளரி சாறு (Cucumber Juice)
கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய் உட்கொள்வது மிக அவசியமானாதாகவும் நல்லதாகவும் கருதப்படுகின்றது. வெள்ளரிக்காயில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதில் உள்ள கலோரிகளின் அளவு மிக குறைவு. குறைந்த கலோரி கொண்ட இந்த பானத்தை உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்தவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். இது தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கிறது. செரிமானத்தை சீராக்குவதுடன் நீண்ட நேரம் இது உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
கேரட் சாறு (Carrot Juice)
நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் சாறு குடிப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். இதைக் குடிப்பதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. கேரட் உட்கொள்வது கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் செரிமானத்தை சீராகிறது, வளர்ச்சிதை மாற்றம் மேம்படுகிறது, கண் பார்வை பலப்படுகிறது.
தக்காளி சாறு (Tomato Juice)
நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் தக்காளியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் காலையில் தக்காளி சாறு உட்கொள்வதால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Raw Banana: நீரிழிவு முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் வாழைக்காய்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ