உடல் எடை குறைய இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்

Healthy Weight Loss: பச்சை, ஊதா நிறங்களில் காணப்படும் முட்டைக்கோஸ், பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதன் ஜூஸ் செய்து குடித்தால், பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 5, 2022, 03:27 PM IST
  • முட்டைகோஸ் ஜூஸ் குடித்தால் எடை குறையும்
  • அல்சரை குணமாக்கும் முட்டைகோஸ்
  • முட்டைக்கோஸ் சாறு சுவையாக செய்வது எப்படி
உடல் எடை குறைய இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும் title=

முட்டைக்கோஸ் ஜூஸ் நன்மைகள்: மக்கள் பொதுவாக முட்டைக்கோஸை காய்கறி வடிவில் சாப்பிடுவார்கள், அதேபோல் இவை சீன உணவுகள், சூப்கள், சாலடுகள் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மக்கள் அதை ஜூஸ் வடிவில் அருந்துவதில்லை. அதன்படி நீங்கள் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்ததில்லை என்றால், நிச்சயமாக அதை குடிக்கத் தொடங்குங்கள். பச்சை, ஊதா நிறங்களில் காணப்படும் முட்டைக்கோஸில், பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் ஜூஸ் செய்து குடித்தால் அதன் பலன்கள் அதிகமாக இருக்கும். அதேபோல் முட்டைக்கோஸ் உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், மலச்சிக்கல் ஏற்படாது. இந்த காய்கறி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும் இவை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், தயாமின், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைட்டோநியூட்ரியண்ட்ஸ், நார்ச்சத்து போன்றவை இருப்பதால், இது மிகவும் சத்தான காய்கறியாகும். முட்டைகோஸில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

முட்டைக்கோஸ் சாறு குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

* முட்டைக்கோஸ் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் குவிப்பு பல நோய்கள் மற்றும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதேபோல் இந்த ஜூஸ்ஸில் வைட்டமின் சி உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

* முட்டைக்கோஸ் ஜூஸ்ஸில் அழற்சி எதிர்ப்பு கலவைகள், சல்பர் கலவைகள் போன்ற பல்வேறு கலவைகள் உள்ளன, இது உடலில் ஏற்படும் அழற்சி பிரச்சனையை குறைக்க உதவுகிறது. இந்த ஜூஸை காலையில் குடித்தால், வீக்கம் பிரச்சனை தவிர்க்கப்படும்.

* பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நீங்கள் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்பட்டால், தினமும் ஒரு கப் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிக்கவும். இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல வகையான தாதுக்கள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

* முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து குடிப்பதால் உடலில் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ரால் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிக அளவில் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆரோக்கியமானது.

* அதிக பருமனானவர்கள், தங்கள் உடல் எடையைக் குறைக்க முட்டை கோஸ் ஜூஸ் குடிக்கலாம். இது நமது உள் உறுப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழிக்க வல்லது. குறைவான கலோரியே உள்ளதால் கொழுப்பும் சேராது.இதனால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Vitamin A Deficiency: வைட்டமின் ஏ குறைபாடு அறிகுறிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News