பால் குடிக்க பிடிக்கலையா? கால்சியம் தேவைக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

Strength Your Bones With Calcium Foods: எந்தெந்த பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது என்பதைத் தெரிந்துக் கொண்டால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 9, 2023, 06:01 PM IST
  • கால்சியம் பற்றாக்குறையை போக்கும் சைவ உணவுகள்
  • பாதாம் புரதம் மற்றும் கால்சியத்தின் வளமான மூலமாகும்
  • சோயாபீன், சோயா பால், டோஃபு அவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது
பால் குடிக்க பிடிக்கலையா? கால்சியம் தேவைக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க title=

இன்றைய காலகட்டத்தில், பலர் பால் மற்றும் பால் பொருட்களை தங்கள் உணவில் இருந்து விலக்கி வைக்க விரும்புகிறார்கள். ஆனால், பால் உட்பட அதிலிருந்து கிடைக்கும் அற்புதமான ஆரோக்கியம் கொண்ட பொருட்களை விலக்குவதால், கால்சியம் சத்து குறைபாடு ஏற்படலாம். ஆனால், பாலைத் தவிர, பல பொருட்களில் கால்சியம் சத்து ஏராளமாக உள்ளது.

எனவே, பால் குடிக்க பிடிக்காதவர்கள், இந்த உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்

வலுவான எலும்புகளுக்கான உணவுகள்

எந்தெந்த பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது என்பதைத் தெரிந்துக் கொண்டால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சைவ உணவுகளில் கால்சியம்
 சைவ உணவுகள், குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. பசுங்கீரை, கீரைகள், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, பீட்ரூட் கீரை, கருப்பு கடுகு, சுரைக்காய், பட்டாணி, பச்சைப்பயறு மற்றும் ஓட்மீல் ஆகியவற்றில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது.

மேலும் படிக்க | சுகர் இருக்கா, உங்க உடல் எடை கூடாம இருக்க இதை மட்டும் பண்ணுங்கள்

கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள்
கொட்டைகள் மற்றும் உலர் பழங்களில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. அவற்றை நேரடியாக உண்ணலாம்.

பாதம் கொட்டை
புரதம் மற்றும் கால்சியத்தின் வளமான மூலமாகும், இவை இரண்டும் நமது எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளை வலிமையாக்குகின்றன. பாதாமில் கணிசமான அளவு கால்சியம் சத்து உள்ளது. அன்றாட உணவில் பாதாமை சேர்த்துக் கொள்வதன் மூலம், நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கிடைக்கிறது.  பாதாம் பால், பாதாம் வெண்ணெய், ஊறவைத்த பாதாம் என பல வழிகளிலும் பாதாமை உட்கொள்ளலாம்.

வெள்ளை எள்

வெள்ளை எள், கால்சியத்தின் சிறந்த மூலமாகும். எள்ளு மிட்டாய், எள்ளு சட்னி மற்றும் பல உணவுகளில் எள் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சளில் கால்சியம் சத்து
மஞ்சளிலும் கால்சியம் உள்ளது. மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம், நம் உடலுக்கு பல வைட்டமின் கூறுகள் கிடைக்கின்றன, இது மிகவும் நன்மை பயக்கும்.

சுரைக்காய்
சுரைக்காயில் அதிக அளவு கால்சியம் உள்ளது, இது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

சோயா
சோயா என்றும் அழைக்கப்படும் சோயாபீனில் கால்சியம் அதிகம் உள்ளது. சோயா நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். சைவ உணவில், சோயா அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உங்களுக்கு கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும்.

இதற்கு சோயாபீன், சோயா பால், டோஃபு போன்றவற்றை உட்கொள்ளலாம். அவற்றில் கால்சியத்துடன் வைட்டமின் டி உள்ளது, இது எலும்புகளின் வலிமைக்கு மிகவும் முக்கியமானது.

உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் மூட்டு வலி, பல்வலி போன்ற பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். உடலுக்கு பலமூட்டும் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேணி காப்பது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க | கோடையில் ஹீட் ஸ்ட்ரோக்கைத் தவிர்க்க சிறந்த வழி..! அமிர்த பானத்தை பருகுங்கள் - பிபி குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News