இந்த பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் சேர்த்துக் கொள்ளக்கூடாது..! யாருக்கு வேண்டாம்?

ஏற்கனவே நீரழிவு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2023, 06:54 AM IST
  • மஞ்சள் அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது
  • நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்கனும்
  • அதிகம் சேர்த்தால் உடலுக்கு ஆபத்து
இந்த பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் சேர்த்துக் கொள்ளக்கூடாது..! யாருக்கு வேண்டாம்? title=

மஞ்சள் மருத்துவம் 

மஞ்சளில் பல மருத்துவக் குணங்கள் அதிகளவில் உள்ளது. இருந்தப் போதும் பித்தப்பை பிரச்சனைகள், நீரழிவு நோயாளிகள், இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் போன்ற உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமில்லாது இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பிரதானமான பொருளாகவும் உள்ளமஞ்சள், சைவம், அசைவம் என எந்த சமையலிலும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்கப்படும். இதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவு இருப்பதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் பாலில் அல்லது சுடு தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருகுவது நல்ல தீர்வாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் படிக்க | வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா

எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?

சுகாதார ஆய்வறிக்கையின் படி, ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மல்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை உபயோகிக்கலாம். இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதோடு வேறு என்னென்ன பாதிப்புகள் உள்ளது? என தெரிந்துக்கொள்வோம்.

மஞ்சள் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

மஞ்சளில் பல்வேறு நோயெதிர்ப்பு பண்புகள் மட்டுமில்லாது தொடர்ச்சியாக மஞ்சளை நாம் சாப்பிட்டு வரும் போது, இதில் உள்ள குர்குமினால் டிமென்சியா என்ற நினைவாற்றல் இழப்பு செயல்திறனை மேம்படுத்த உதவியாக உள்ளது. இருந்தப்போதும் சில நோய் அறிகுறிகள்  உள்ளவர்கள் அதிகளவு மஞ்சள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய நிலையும் உள்ளது. பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் வேண்டாம்

மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால், ஏற்கனவே நீரழிவு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் அதிகளவு உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

இரப்பை பிரச்சனை உள்ளவர்கள்

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறு அல்லது GERD உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உங்களது உடல் நிலையை மேலும் மோசமாக்கிவிடும். மஞ்சளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலில் உள்ள இரும்புச்சத்துக்களை குறைக்க நேரிடுகிறது. ஏற்கனவே இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உடனடியாக மஞ்சள் உட்கொள்வதை நிறுத்திவிடுங்கள்.

கல்லீரல் பாதிப்புள்ளவர்கள் தவிர்க்கவும்

உங்களுக்கு கல்லீரல் நோய் இருந்தால், மஞ்சளை உட்கொள்வது சில கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வயிற்று வலி, வயிற்றுக்கோளாறு, தலைவலி போன்ற பிரச்சனைகளும் மஞ்சள் அதிகளவு சாப்பிடுவதால் நேரிடும். எனவே இதுப்போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மஞ்சளை உங்களவு உணவு முறையில் குறைந்த அளவு அல்லது பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அதே சமயம் முக பராமரிப்பிற்கு மஞ்சளை எவ்வித அச்சமும் இன்றி உபயோகிக்கலாம்.

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கிடைக்கும் PPF மீதான கடன்! விண்ணப்பிக்கும் முறை!

(மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது மட்டுமே சிறந்ததாக இருக்கும்)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News