COVID -19: கேளிக்கை பூங்காக்களுக்கான வழிகாட்டிதல்களை வெளியிட்டுள்ளது அரசு...!!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை என்றாலும்,  கேளிக்கை பூங்காக்கள் மற்றும்  அதில் தண்ணீரில் மேற்கொள்ளப்படும் கேளிக்கை விளையாட்டுகள் தொடர்பாக, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2020, 10:13 AM IST
  • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரும்பாலான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை.
  • இருப்பினும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அதில் தண்ணீரில் மேற்கொள்ளப்படும் கேளிக்கை விளையாட்டுகள் தொடர்பாக, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
COVID -19: கேளிக்கை பூங்காக்களுக்கான வழிகாட்டிதல்களை வெளியிட்டுள்ளது அரசு...!!! title=

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு  பெரும்பாலான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை என்றாலும்,  கேளிக்கை பூங்காக்கள் மற்றும்  அதில் தண்ணீரில் மேற்கொள்ளப்படும் கேளிக்கை விளையாட்டுகள் தொடர்பாக, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 நோய் பரவாமல் இருக்க, நிர்வாகம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி, தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்பட வேண்டும். மேலும், குளோரினேஷன் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

எனினும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் கேளிக்கை பூங்காக்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கைகளை கட்டாயமாக சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது,

சவாரிகளைத் தொடங்குவதற்கு முன்பு, அடிக்கடி  தொடப்படும் கருவிகளின் மேற்பரப்புகள் சானிடைஸ் செய்யப்பட வேண்டும்.

நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, சவாரிகள், அருங்காட்சியகங்கள், தோட்டங்கள், கடைகள் போன்ற பொது பயன்பாட்டு பகுதிகள் மற்றும் திறந்தவெளிகள் 1% சோடியம் ஹைபோகுளோரைட் உள்ள கரைசலுடன் சுத்தப்படுத்தப்பட வேண்டும். 

ALSO READ | ஐநாவில் பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்த இந்தியா..!!!

கேளிக்கை பூங்காக்களில், சவாரிகளை மேற்கொள்ளும் பார்வையாளர்கள், சவாரிக்கு முன்னும் பின்னும்  

பூங்காவிற்குள் பார்வையாளர்கள்  சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதிப்படுத்த கண்காணிப்பு பணிக்காக சி.சி.டி.வி யை அதிக அளவில் பயன்படுத்த சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகின்றன.  

மேலும் கேளிக்கை  பூங்காவில் பணியில் உள்ளவர்கள், அறிகுறி ஏதும் இல்லாதவர்களாக, இருக்க வேண்டும். 

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டில் தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும்,கட்டுப்பாட்டு மண்டலங்களில் கேளிக்கை பூங்காக்கள்  இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் மட்டுமே மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ALSO READ | அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News