பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது நல்லதா... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது என்ன?

Soaking Almonds: பாதாம் உடலுக்கு நல்லது என்றாலும் அதனை பச்சையாக உட்கொள்வது அதிக பலனை தருமான அல்லது நீரில் ஊறவைத்த பின் உட்கொள்வது பலனை தருமா என்பது குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 20, 2023, 08:07 AM IST
  • இனிப்பு வகைகளை அலங்கரிக்கவும் பாதாம் பயன்படுகிறது.
  • பாதாமில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன.
  • பச்சையாக பாதாம் சாப்பிடுவது பற்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது நல்லதா... ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது என்ன? title=

Soaking Almonds: பாதாம் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழமாகும். இது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சிலர் இதை பச்சையாக சாப்பிட விரும்புகிறார்கள். இன்னும் சிலர் அதை தண்ணீரில் ஊறவைத்த பிறகு சாப்பிட விரும்புகிறார்கள். 

அல்வா போன்ற இனிப்பு வகைகளை அலங்கரிக்கவும் பாதாம் பயன்படுகிறது. ஆனால் தண்ணீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது சரியா, இல்லையா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படும். இது குறித்து, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவிடம் கலந்துரையாடினோம். அவர் கூறிய கருத்துகளின் சுருக்கத்தை இங்கு காணலாம்.

பாதாமில் காணப்படும் சத்துக்கள்

பாதாமில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, வைட்டமின் ஈ, மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது தவிர தாமிரம், வைட்டமின் பி2 மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இதில் உள்ளன.

பலனளிக்குமா அளிக்காதா?

உணவியல் நிபுணர் ஆயுஷியின் கூற்றுப்படி, உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் நாம் காலையைத் தொடங்குவது மிகவும் நல்லதாகும். அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்த உலர் பழத்தில் உள்ள பைடிக் அமிலத்தின் உள்ளடக்கத்தை குறைக்கிறது. மறுபுறம், நீங்கள் அதை பச்சையாக சாப்பிட்டால், பைடிக் அமிலம் குடலில் வெளியிடப்படும் என்கிறார். 

மேலும் படிக்க | BP பிரச்னை வரக்கூடாதா... அப்ப இந்த 3 பழக்கத்த இப்போவே விடுங்க!

செரிமானத்திற்கு நல்லது

பச்சையாக பாதாம் சாப்பிடுவது பற்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக பற்கள் பலவீனமாகலாம் அல்லது வலியை ஏற்படுத்தும், இது தவிர, செரிமானத்திற்கும் ஊறவைத்த பாதாம் மிகவும் நல்லதல்ல. ஏனெனில் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அஜீரணம் பற்றிய புகார் உள்ளது. மாறாக, பாதாமை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால், மென்று சாப்பிடுவது எளிதாக இருக்கும், அதன் பிறகு செரிமானம் செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது, மேலும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலில் உறிஞ்சப்படும்.

கிடைக்கும் நன்மைகள்

இது ஒருபுறம் இருக்க, பாதாமில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாதாம் சாப்பிடுவதால் மூளை கூர்மையாகிறது. இதை நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஆனால் பாதாம் மூளைக்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கு நிவாரணமாக அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. உணவு உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் 20 கிராம் பாதாம் சாப்பிடுவது குளுக்கோஸ் அதிகரிப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 20 கிராம் பாதாமை உட்கொள்வது பிபிஎஹ்ஜி- ஐக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான கொழுப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் புரத நார்ச்சத்து ஆகியவை பாதாமில் ஏராளமாக உள்ளன. இதனுடன், பச்சையான பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் எனவும் கூறப்படுகிறது. இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. 

மேலும் படிக்க | நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News