புதுடெல்லி: பொடுகு பிரச்சனை சர்வ சாதாரணமாகிவிட்டது. பெண்களைத் தவிர ஆண்களின் தலையிலும் பொடுகு பிரச்சனை உள்ளது. அதன்படி பெண்களை போலவே ஆண்களும் பொடுகு பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நாம் லட்சக்கணக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்துகிக்கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தலையில் பொடுகு தொல்லையை போக்க சில வீட்டு வைத்தியங்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம். இவற்றை பின்பற்றி நீங்களும் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பேக்கிங் சோடாவால் பொடுகு குறையும்
பேக்கிங் சோடா பொடுகைக் குறைக்கவும் பயன்படுகிறது. தலைமுடிக்கு ஷாம்பு போடும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து தலையில் நன்றாக மசாஜ் செய்து பின் தலையை அலசவும். இதன் காரணமாக, தலையின் வேர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் படிவுகள் பொடுகுத் தொல்லையைப் போக்கும்.
மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பொடுகுக்கு கற்றாழையை எப்படி பயன்படுத்துவது
கற்றாழை ஜெல் பல நன்மைகளைக் கொண்டுள்ளது, இது தோல் பராமரிப்பு முதல் முடி பராமரிப்பு வரை பயன்படுத்தப்படுகிறது. இது பொடுகின் மீது நல்ல விளைவைக் காட்டுகிறது. பொடுகு வேர்களில் ஒட்டாமல் இருக்க சீப்பினால் உங்கள் தலைமுடியை லேசாக சீவவும், பின்னர் கற்றாழை ஜெல்லை தலை முழுவதும் நன்கு தடவவும். 20-25 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு உங்கள் தலையை நன்கு கழுவுங்கள்.
சீடர் வினிகர் பொடுகுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
ஆப்பிள் சீடர் வினிகர் பொடுகை நீக்கவும் பயன்படுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சம அளவு எலுமிச்சை சாறு எடுத்து இரண்டு மடங்கு தண்ணீர் கலக்கவும். தயாரிக்கப்பட்ட கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும், அதை உங்கள் தலைமுடியில் தெளிக்கவும், 20 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு உங்கள் தலையை கழுவவும். இதனால் பொடுகும் குறையும்.
தேங்காய் எண்ணெய் தீர்வு
தேங்காய் எண்ணெய் பொடுகுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடாக்கவும். இப்போது எண்ணெய் கொண்டு தலையை நன்றாக மசாஜ் செய்து சுமார் அரை மணி நேரம் வைத்திருந்த பின் தலையை அலசவும். இதனால் உங்கள் உச்சந்தலையில் உள்ள பொடுகை நிச்சயம் குறைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR