கரும்புச்சாறு குடிப்பதால் உடல் எடை கூடுமா? உண்மை என்ன

உடல் எடையை குறைக்கும்போது கரும்புச்சாறு குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2022, 04:41 PM IST
  • கரும்பு ஜூஸ் கோடையில் குடிக்கலாமா?
  • உடல் எடையை குறைப்பவர்கள் யோசிக்க வேண்டும்
  • கரும்பு ஜூஸில் சர்க்கரை அதிகம்
கரும்புச்சாறு குடிப்பதால் உடல் எடை கூடுமா? உண்மை என்ன  title=

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், மதிய நேரத்தில் வெப்பம் வதைத்தெடுக்கிறது. இதனால், உடலைக் குளிர்விக்கவும், சோர்வைப் போக்கவும் கரும்புச் சாறு குடிக்க பலரும் பரிந்துரைக்கின்றனர். குறைவான விலையில் கிடைப்பதாலும், மற்ற பானங்களைக் காட்டிலும் கரும்புச்சாறை குடிக்க விரும்புகின்றனர். 

ஆனால், உடல் எடையை குறைக்க முயற்சியில் இருப்பவர் கரும்புச்சாறை குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இருக்கிறது. ஒருவேளை கரும்புச்சாறு குடித்து உடல் எடை அதிகரித்துவிடுமோ? என்றும் அஞ்சுகின்றனர். அதனால், கரும்புச்சாறில் இருக்கும் கலோரி அளவை தெரிந்து கொண்டால், உங்களுக்கு தெளிவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் படிக்க | இந்த 4 ட்ரை புரூட்ஸ் உடலில் அதிகரித்த கொழுப்பை ஈசியா குறைக்கும்

கரும்புச் சாற்றில் உள்ள சத்து

240 மி.லி. கரும்புச் சாற்றில் 250 கலோரிகள் உள்ளன. 30 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. கரும்புச் சாற்றில் கொலஸ்ட்ரால், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஜீரோ அளவில் உள்ளது. இருப்பினும், இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. ஒவ்வொரு கிளாஸ் கரும்பு சாறிலும் 13 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாட உடலுக்கு தேவையான நார்ச்சத்தில் 52 சதவீதமாகும். கரும்பு சாற்றில் கொழுப்பு இல்லை. 

மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் ஃபைபர் மட்டுமே உட்கொள்வதாக தெரிவித்துள்ளது. ஆனால், நாளொன்றுக்கு 20 முதல் 35 கிராம் பைபர் ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். 

கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?

அதேநேரத்தில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைப்படி, சர்க்கரை உட்கொள்ளலை ஒரு நாளைக்கு 6 முதல் 9 தேக்கரண்டி வரை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிக சர்க்கரை உட்கொள்ளல் உடல் பருமன் மற்றும் எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என கூறியுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நீங்கள் டயட்டில் இருந்தால், கரும்பு சாறு சாப்பிடலாமா என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது. 

மேலும் படிக்க | Heart Health: பலவீனமான இதய நரம்புகள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்; அதற்கான அறிகுறிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News